சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு! கோவையில் விற்பனை அதிகரிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

13 ஜூலை
2020
02:00
பதிவு செய்த நாள்
ஜூலை 12,2020 23:43

கோவை:கோவையில் உள்ள சைக்கிள் கடைகளில் கடந்த மாதம், 25-30 சதவீத அளவு விற்பனை அதிகரித்துள்ளது; ஊரடங்கு அமலில் இருப்பதால், பலரும் 'சைக்கிள் கிளப்'பில் இணைந்து வருகின்றனர்.ஜிம், விளையாட்டு மைதானங்கள் மூடப்பட்டுள்ளதால், உடலை 'பிட்' ஆக வைத்துக்கொள்ள, சைக்கிள் ஓட்டுவதை பலரும் பழக்கமாக்கி வருகின்றனர். கோவையில் இதன் விற்பனை, கணிசமாக அதிகரித்து வருவதாக, கூறுகின்றனர்

விற்பனையாளர்கள்.


இதுகுறித்து, விற்பனையாளர்கள் சிலர் கூறியதாவது:கடந்தாண்டு ஜூன் மாதம், பத்து லட்சம் ரூபாய்க்கு சைக்கிள் விற்பனையானது. நடப்பாண்டு ஜூன் மாதம், 17-18 லட்சம் ரூபாய் அளவுக்கு விற்பனை செய்துள்ளனர்.பொது போக்குவரத்து தடைபட்டுள்ளது காரணமாக இருக்கலாம். கொரோனா தொற்று காரணமாக, தனியார் வாகனங்களில் பயணிப்பதை, பாதுகாப்பு இல்லை என, சிலர் கருதுகின்றனர்.தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய சூழல் உள்ளதால், ஜிம், நீச்சல் குளம், விளையாட்டு மைதானங்களுக்கு, செல்ல முடியவில்லை. இதனால், சைக்கிள் ஓட்டுவது மாற்று உடற்பயிற்சியாக இருப்பதும், விற்பனை அதிகரிக்க ஒரு காரணமாக உள்ளது.


கடந்த மாதம், 25-30 சதவீத அளவு விற்பனை அதிகரித்துள்ளது.சைக்கிளுக்கான உதிரிபாகங்களை தருவிப்பதில் சிரமம் உள்ளதால், உற்பத்தி குறைந்து வருகிறது. வேலைக்கு ஆட்கள் இல்லாதது, கனரக வாகனங்களுக்கான தடை போன்ற காரணங்களால், சைக்கிள் உற்பத்தி குறைந்துள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


'சைக்கிளிங் சிறந்த உடற்பயிற்சி'கோவை 'அதலெட்டிக் கிளப்' துணை தலைவர் ரமேஷ் கூறுகையில், ''கடந்த ஒரு மாதமாக சைக்கிள் கிளப்புகளில், இணையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சைக்கிள் ஓட்டுவது உடற்பயிற்சி என்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் உகந்தது என்பது குறித்த விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளததே காரணம்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X