வேண்டும்: அரசு மருத்துவமனையை கொரோனா மையமாக மாற்ற...தொற்று அதிகரிப்பதால் கலெக்டரின் நடவடிக்கை தேவை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
23:59

திண்டிவனம்,; கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், திண்டிவனத்திலுள்ள அரசு மருத்துவமனையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



திண்டிவனம் நகராட்சி பகுதியில் தொடர்ந்து கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நகராட்சி பகுதியில் கொரேனா தொற்றால் இதுவரை 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 68 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். 46 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் பாதிக்கப் பட்ட மூன்று பேர் இறந்தனர். நோய் தீவிரமடைந்து, திண்டிவனம் நகராட்சி பில் கலெக்டர் பாதிக்கப்பட்டதால், நகராட்சி அலுவலகம் தொடர்ந்து மூன்று நாட்கள் மூடப்பட்டது. இதே போல் ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியருக்கு தொற்று ஏற்பட்டதால், அலுவலகமும் மூடப்பட்டது.இது இல்லாமல் திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்இன்ஸ்பெக்டர் மற்றும் மகளிர் போலீசார் என மூன்று பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.திண்டிவனத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், திண்டிவனம் பகுதியில் கொரோனா பாதிப்பு குறித்து கண்டறிவதற்கான மருத்துவசோதனையான பி.சி.ஆர்.டெஸ்ட், திண்டிவனம் ஜெயபுரம் பகுதி யிலுள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திண்டிவனத்தை சுற்றி யுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் எடுக்கப்படுகின்றது.திண்டிவனத்தில் நீண்ட காலமாக இருந்து வரும் அரசு மருத்துவமனையில் இதுவரை பி.சி.ஆர். டெஸ்ட் எடுக்கப்படவில்லை.திண்டிவனத்திற்கு அருகிலுள்ள விக்கிரவாண்டி தாலுகா மருத்துவமனை கூட, தற்போது கொரோனா மருத்துவமனை வார்டாக மாற்றம் செய்வதற்கு உத்தரவாகியுள்ளது.





ஆனால் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் போதுமான இடவசதி, படுக்கை வசதி இருந்தும், கொரோனா வார்டாக மாற்றுவதற்கான எந்த உத்தரவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை. அரசு மருத்துவமனையில் போதுமான லேப் வசதிகள், லேப் டெக்னி ஷியன்கள் இருந்தும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படாமல் இருப்பது, நோயாளிகளை அலைக்கழிக்கும் செயலாக உள்ளது.ஜெயபுரம் மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாள்தோறும் பத்து பேருக்கு மட்டுமே பரிசோதனை நடத்தப்படுவதாக பொது மக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.



இதனால் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனை மற்றும் விழுப்புரத்திலுள்ள பழைய மருத்துவ மனை உள்ளிட்ட இடங்களில் கொரோனா நோயாளிகள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டு, இடப் பற் றாக்குறை நிலவுகின்றது.இதை கருத்தில் கொண்டு, நகரத்தின் மைய பகுதியிலுள்ள திண்டிவனம் அரசு மருத்துவமனையை, கொரோனா பரிசோதனை மற்றும் கொரோனா சிகிச்சை வார் டாக மாற்றுவதற்கு, மாவட்ட கலெக்டர் மற் றும் அரசு மருத்துவகல்லுாரி டீன் , மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் உள்ளிட்டவர்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X