விழுப்புரம்; விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை யொட்டி, சிறப்பு மருத்துவ குழுவினர் வீடு,வீடாக சென்று சளி, இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியும் பணிகளில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட, ஜி.ஆர்.பி., தெருவில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, அந்த பகுதியில் சிறப்பு மருத்துவ குழுவினர் மூன்றாம் கட்டமாக வீடு, வீடாக சென்று சளி, இருமல் மற்றும் காய்ச்சல் சம்பந்தமான அறிகுறிகள் உள்ளதா என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.இதையடுத்து, இன்று (13ம் தேதி) விழுப்புரம் நகராட்சி மற்றும் திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும், இது போல், வீடு, வீடாக சென்று மூன்றாம் கட்ட கொரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியும் பணிகளை மேற்கொள்ள, கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.