| ஆதரவு: மாவட்டத்தில் முழு ஊரடங்கிற்கு மக்கள் முழு ஆதரவு: வெறிச்சோடியது சாலைகள் Dinamalar
ஆதரவு: மாவட்டத்தில் முழு ஊரடங்கிற்கு மக்கள் முழு ஆதரவு: வெறிச்சோடியது சாலைகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
00:31

ராமநாதபுரம்: கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிப்பு அதிகரித்ததால் அரசு பஸ் போக்குவரத்தை ஜூலை 15 வரை ரத்து செய்து, ஜூலை 31 வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமையிலும்முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றுமாறு அறிவித்தது.



மேலும் முகக்கவசம் அணியாதவர்கள் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூலை 5ல் நடந்த முழு ஊரடங்கிலும்,நேற்று(ஜூலை 12) நடந்த ஊரடங்கிலும் மக்கள் முழுமையாக ஆதரவு அளித்தனர்.மருந்தகங்கள் உள்ளிட்ட எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. எப்போதும்கூட்ட நெரிசலுடன் காணப்படும் அரண்மனை பகுதி, சாலைத் தெரு, வண்டிகார தெரு, அரசு மருத்துவமனை ரோடு, புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதி, பாரதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆள் நடமாட்டமே இல்லை.



மேலும் சாலைகளில் எந்த வாகனப் போக்குவரத்தும் இல்லாததால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடின. டூவீலர், ஆட்டோ, கார் உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயங்காததால் அமைதி நிலவியது. மக்கள் அளித்த முழு ஆதரவால் போலீசாரையும் சாலைகளில் காணமுடியவில்லை. இதே நிலைதான் ராமேஸ்வரம், பரமக்குடி, கீழக்கரை நகராட்சி பகுதிகள் உட்பட மாவட்டம் முழுவதும் காணப்பட்டது.ராமேஸ்வரம்முழு ஊரடங்கினால் ராமேஸ்வரம் பகுதியில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச் சோடி கிடந்தது.



ராமேஸ்வரம், தங்கச்சி மடம், பாம்பனில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, சாலையில் வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது.மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் 2 ஆயிரம் விசை, நாட்டுபடகுகள் கடற்கரையில் நிறுத்தப் பட்டு இருந்தது.தினமும் ராமேஸ்வரம் திருக்கோயில் கிழக்கு வாசலில் நின்று தரிசிக்கும் வெளியூர் பக்தர்கள் வருகை இன்றி, கோயில் ரதவீதி வெறிச்சோடி கிடந்தது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X