வரத்துக் கால்வாய் துார்வாருவதாகக் கூறிபழமையான மரங்கள் வெட்டி சாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
00:38

காரைக்குடி:கல்லல் அருகே உள்ள துளாவூரில்,வரத்துக்கால்வாயை துார்வாருவதாகக் கூறி, பழையமரங்கள் வெட்டப்பட்டுள்ளது.



கல்லல் ஒன்றியம் தட்டட்டி ஊராட்சிக்கு உட்பட்ட துளாவூரில் விவசாயமே முக்கியத் தொழில்.இங்குள்ள அரசுக் கண்மாய் 11.27 எக்டேர் பரப்பளவு கொண்டது. இதனை நம்பி விவசாய நிலங்கள் உள்ளன.இக்கிராமத்தை சுற்றிலும், வேம்பு, கடம்பு, வாகை, பூவரசு உள்ளிட்ட பல மரங்கள் இருப்பதால் துளாவூர் கிராமம்பசுமையாக காட்சியளிக்கிறது.



இங்குள்ள அரசு கண்மாய் மற்றும் வரத்துக்கால்வாய்களை துார்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.கண்மாயை ஆழப்படுத்தினால் மடையில் தண்ணீர் ஏறாது என்பதால் குடிமராமத்து பணிக்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 20 நாட்களாக வரத்துக்கால்வாயில் துார் வாரும் பணிமட்டுமே நடந்து வருகிறது.இப்பணி யினை பயன்படுத்தி மரங்கள் மட்டுமே வெட்டப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.



இதுகுறித்து பாஸ்கர் கூறுகையில்; கடந்த 20 நாட்களாக வரத்துக்கால்வாய் துார்வாரும் பணி நடக்கிறது. 500 அடி கூட துார்வாரப்படவில்லை.மரங்கள் மட்டும் தான் வெட்டிஎடுக்கப் படுகிறது.அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை, என்றார்.தாசில்தார் ஜெயலட்சுமி கூறுகையில்;மரங்கள் வெட்டுவதாக புகார் வந்தது. கருவேல மரங்கள் என்று நினைத்தோம். வருவாய் ஆய்வாளரை விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். மரங்கள் வெட்டியிருந்தால், மரங்களுக்கு ஏற்றவாறு அபராதம் விதிக்கப்படும், என்றார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X