மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.300 குறைவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
00:56

உடுமலை:வெளி மாநில வரத்து காரணமாக, மக்காச்சோளம் விலை, குவிண்டாலுக்கு, 300 ரூபாய் வரை குறைந்துள்ளது.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. கடந்தாண்டு, படைப்புழு தாக்குதல், வறட்சி காரணமாக, மக்காச்சோளம் பயிர்கள் பாதித்து, வரத்து குறைந்தது.கோழி, மாட்டுத்தீவன உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவை அதிகரிப்பால், குவிண்டால், 2,800 ரூபாய் வரை விற்றது. இதனால், மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். இப்பகுதியில், 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை நடந்து வருகிறது. வரத்து அதிகரிப்பு, கொரோனா ஊரடங்கு காரணமாக, கறிக்கோழி விற்பனை சரிவு காரணமாக, தீவனத்திற்கு பிரதானமாக உள்ள மக்காச்சோளம் விலை குறைந்தது.கடந்த மாதம் வரை, குவிண்டால், 1,875 ரூபாய் வரை விற்று வந்தது. விலையை எதிர்பார்த்து அறுவடை செய்த மக்காச்சோளத்தை விவசாயிகள் இருப்பு வைத்தனர்.இந்நிலையில், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து சரக்கு ரயில்கள் மூலம், மக்காச்சோளம் வரத்து காணப்படுவதால், விலை குறைந்துள்ளது. நேற்று, குவிண்டால், 1,550 முதல் 1,575 வரை மட்டுமே விற்று வருகிறது. இதனால், விவசாயிகள் பாதித்துள்ளனர்.ஒழுங்கு முறை விற்பனைக்கூட அதிகாரிகள் கூறுகையில், 'பீகார் மாநிலத்திலிருந்து, கடந்த ஒரு மாதத்தில், 2,500 டன் வரை மக்காச்சோளம் வந்துள்ளது. கோழித்தீவன நிறுவனங்களுக்கு, 1,500 ரூபாய்க்கு டெலிவரி செய்யப்படுகிறது. இதனால், உள்ளூர் மக்காச்சோளம் விலை குறைந்துள்ளது. வெளி மாநில மக்காச்சோளத்தை விட உள்ளூர் மக்காச்சோளம் தரமாக உள்ளதால், விலை, கூடுதலாக உள்ளது,' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X