15 ஆண்டுகளுக்கு மேலாகியும் இடிக்கப்படாத கண்டரமாணிக்கம் சுகாதார நிலைய கட்டடம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
01:03

திருப்புத்துார்,:திருப்புத்துார் அருகே கண்டரமாணிக்கத்தில் இயங்கும் சுகாதார நிலையத்தில் உள்ள சேதமடைந்த கட்டடத்தை அகற்றி, 24 மணி நேர சிகிச்சை கிடைக்க மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டுமென கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.



1938ல் ராஜாஜி முதல்வராக இருந்த போது திறக்கப்பட்டது கண்டரமாணிக்கம் அரசு மருத்துவமனை. 20 படுக்கைகளுடன் சுப்ரமணியம் தர்ம மகப்பேறு மருத்துவமனை என்ற பெயரில் துவக்கப்பட்டது. 1988 ல் மருத்துவமனை அரசுக்கு வழங்கப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்படுகிறது. \பழைய கட்டடம் சேதமடைந்ததால் புதிய கட்டடம் கட்டப்பட்டு அதில் இயங்கி வருகிறது.



ஆனால் 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் சேதமடைந்த கட்டடம் இதுவரை இடிக்கப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது.இங்கு சுற்றுப்புறத்திலுள்ள 50க்கும் அதிகமான கிராம மக்கள் சிகிச்சை பெறுகின்றனர். டாக்டர்கள் தங்க குடியிருப்பு வசதி இல்லை. இங்குள்ள மக்கள் திருப்புத்துாருக்கும், செம்பனுாருக்கும் சிகிச்சைக்காக செல்ல வேண்டியுள்ளது. இங்குள்ள சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட வட்டார ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தினால் 30 படுக்கை வசதி, ஆம்புலன்ஸ், கூடுதல் டாக்டர், 24 மணி நேர சிகிச்சை கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.



கண்டரமாணிக்கம் ம.காளிமுத்து கூறுகையில், இங்குள்ள பழைய கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளதை பல முறை கோரியும் அகற்றவில்லை. நோயாளிகள் அது தெரியாமல் அங்கு உட்காருகின்றனர். அதை அகற்ற வேண்டும். குடியிருப்பு வசதியுடன் கூடுதலாக டாக்டர்கள் நியமிக்க வேண்டும்.' என்றார்.



என் சண்முகம் கூறுகையில், இங்கு ஆம்புலன்ஸ் இல்லாததால் வெளியூரிலிருந்து வந்து நோயாளிகளை அழைத்து வர வேண்டியுள்ளது. சிகிச்சை தாமதமாவதைத் தவிர்க்க ஆம்புலன்ஸ் வசதி தேவை. கூடுதல் படுக்கை வசதிகளும் தேவை' என்றார்.



வட்டார மருத்துவ அலுவலர் ஆல்வின் ஜேம்ஸ் கூறுகையில், இங்கு மருத்துவர்,செவிலியர் குடியிருப்பு, கூடுதல் பிரசவ வார்டு போன்றவற்றிற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.முன்னுரிமை அடிப்படையில் அரசு நிதி அனுமதி அளித்து வருகிறது. பழைய கட்டடம் அகற்ற பொதுப் பணித்துறையினர் ஆய்வு முடிந்து விட்டது. கொரோனா ஊரடங்கால் தாமதமாகி வருகிறது. விரைவில் அகற்றப்படும்' என்றார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X