போலீஸ் செய்திகள்: ராமநாதபுரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
01:05

மணல் திருட்டு


திருவாடானை: திருவாடானை அருகே பாசானி ஆற்றில் மணல் திருடிய அருளானந்து 40, மாரிமுத்து 59, இருவரையும் கைது செய்த போலீசார் இரு மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.


வாளுடன் இளைஞர் கைது



கமுதி: ஏனாதி மகாலிங்கம் 24. இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. கமுதி போலீசார், அரிகேசவ வழிவிட்ட அய்யனார் கோயில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வாளுடன் வந்த மகாலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.


போக்சோவில் இளைஞர் கைது



கமுதி: கோவிலாங்குளம் அருகேயுள்ள பறையங் குளத்தை சேர்ந்த 15 வயது மாணவியை, அதே கிராமத்தை சேர்ந்த முத்துமுனியாண்டி 20, பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மாணவியின் தாயார் கோவிலாங்குளம் போலீசில் புகார் கொடுத்ததின் பேரில், கோவிலாங்குளம் இன்ஸ்பெக்டர் ஜான்சி ராணி, முத்துமுனியாண்டியை கைது செய்தார்.



விபத்தில் ஒருவர் பலி



திருப்புல்லாணி: ரெகுநாதபுரம் அருகே வைரவன் கோவில் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் 54. நேற்று முன்தினம்வண்ணாங்குண்டு விலக்கில் இருந்து நேருபுரம் ரோட்டில் சென்றார். வளைவில் செல்லும்போது எதிர்பாராமல் கல் தடுக்கியதில் டூவீலரில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து பலியானார்.



198 மதுபாட்டில் பறிமுதல்



முதுகுளத்துார்: முதுகுளத்துார் எம்.ஜி.ஆர்., சிலை அருகே மதுபாட்டில் விற்பனை செய்த இ.நெடுங்குளத்தை சேர்ந்த சந்திரன் 58,என்பவரை எஸ்.ஐ., சக்திவேல் கைது செய்து மறைத்து வைத்திருந்த 198 மதுபாட்டில் பறிமுதல் செய்தார்.



தற்கொலை



முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே நாகனேந்தல் கிராமத்தை சேர்ந்த உடையார் மகள் முருகேஸ்வரி 22, சிலநாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்தார். முருகேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.



கேரள இளைஞர் தற்கொலை



ராமநாதபுரம்: கேரளாவை சேர்ந்தவர் மணிகுட்டன் 35. சாயல்குடி எஸ்.தரைக்குடி பெண்ணை திருமணம்செய்தவர் குடும்ப பிரச்னையில் 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தார்.


ராமநாதபுரம் பாரதிநகர் சேட்டு இப்ராஹிம் நகர் 2வது தெருவில் வாடகை வீட்டில் தனியாக வசித்தார். வாழ்க்கையில் வெறுப்படைந்தவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X