ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடற்கரையில் திடீரென கடல் உள்வாங்கியதால், பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது.
நேற்று காலை பாம்பன் கடற்கரையில் திடீரென 100 மீட்டர் துாரத்திற்கு கடல் உள்வாங்கியது. கடலோரத்தில் உள்ள பாசி படர்ந்த பாறைகள் வெளியில் தெரிந்தும், கடல் சிப்பிகள் நீரின்றி தத்தளித்தது.பகல் 1:00 மணிக்கு பின் பாம்பனில் காற்றின் வேகம் அதிகரித்ததும், கடல் நீர் மட்டம் உயர்ந்து கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது. தென்மேற்கு காற்று வீசும் சீசனில் கடல் உள் வாங்குவதும், பின் இயல்பு நிலைக்கு திரும்புவது வழக்கமானது என மீனவர்கள் தெரிவித்தனர்.