சூளைமேடு,:சூளைமேடு, கில் நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் டேவிட் பீட்டர், 30; ஐ.டி., ஊழியர். நேற்று அதிகாலை, இவரது காரை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். உடனே, வெளியே வர முயற்சித்தபோது, கதவும் வெளிபக்கமாக தாழிடப்பட்டிருந்தது. பின் பக்கத்து வீட்டில் வசிப்போரின் உதவியுடன் வெளியே வந்த அவர், சம்பவம் குறித்து, சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.