திருவொற்றியூர், :சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி விற்க முயன்ற, ஊர்க்காவல் படை வீரரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் தெரு சந்திப்பில், நேற்று முன்தினம் இரவு, திருவொற்றியூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே, இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை மடக்கி விசாரித்தனர். அவர், முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, இருசக்கர வாகனத்தை பரிசோதனை செய்தனர். இதில், 18 குவார்ட்டர் மது பாட்டில்கள் சிக்கின.அவற்றை பறிமுதல் செய்து, போலீசார் விசாரித்தனர். இதில், பிடிபட்டவர், அதே பகுதியைச் சேர்ந்த அசோக்குமார், 27, என்பதும், 2016ல் இருந்து, ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார், பின், பிணையில் விடுவித்தனர்.