ஆக்கிரமிப்பு விஷயத்தில் ஆளுக்கொரு முடிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
01:17

வளசரவாக்கம்,:நம் நாளிதழ் வெளியிட்ட தொடர் செய்தியின் எதிரொலியாக, 140 ஏக்கராக இருந்து, தற்போது வெறும், 5 ஏக்கராக சுருங்கியுள்ள ஆலப்பாக்கம் ஏரியை, 10.5 கோடி ரூபாய் செலவில் துார் வாரி, கரைஅமைக்கும் பணிகளை மாநகராட்சி துவங்கிஉள்ளது.ஆனால், ஆக்கிரமிப்பை அகற்றாமல், ஏரியை துார் வார, பொதுப்பணித்துறை எதிர்ப்பு தெரிவித்து, பணியை நிறுத்திஉள்ளது.சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், 146வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், ஆலப்பாக்கம் ஏரி உள்ளது.இந்த ஏரி, 70 ஆண்டுகளுக்கு முன், 140 ஏக்கரில் இருந்ததாக, அங்கு வசிக்கும் மூத்த குடிமக்கள் தெரிவிக்கின்றனர்.தற்போது, 40 ஏக்கர் மட்டுமே ஏரி என, வருவாய்த் துறை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அந்த ஏரி நிலத்தை ஆக்கிரமித்து, குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கட்டப்பட்டுள்ளன.தற்போது, வெறும், 5 ஏக்கராக ஏரி சுருங்கி விட்டது. அந்த இடத்தையும், கட்டட கழிவுகளை கொட்டி, ஆக்கிரமிக்கும் முயற்சி, அவ்வப்போது நடந்து வருகிறது.நம் நாளிதழ் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவதால், 5 ஏக்கர் ஏரி தற்போது தப்பித்துள்ளது.இந்த ஏரி பராமரிப்பு, பொதுப்பணித்துறை வசம் உள்ளது. ஏரியை, அத்துறை அதிகாரிகள், எட்டிக்கூட பார்ப்பதில்லை.இந்த ஏரியின் வரத்து மற்றும் போக்கு கால்வாய்கள், இருந்த இடம் தெரியாத அளவிற்கு, முற்றிலுமாக மாயமாக்கப்பட்டு விட்டது.நம் செய்தி எதிரொலியாக, 2012 மார்ச்சில், மாநகராட்சி சார்பாக, 30 லட்சம் ரூபாய் செலவில், ஏரிக்கு கம்பி வேலி அமைத்தனர்.தொடர்ந்து, முறையான பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாததால், பாதுகாக்கப்பட்ட பகுதிகள், மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டன.2014 ஜூனில், அ.தி.மு.க., பெண் பிரமுகர் மற்றும் உறவினர்களால், ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு, குடிசைகள் அமைக்கப்பட்டன.லாரிகளில் கட்டடக் கழிவுகள் எடுத்து வந்து, ஏரியில் கொட்டினர். இது குறித்து, நம் நாளிதழில், படத்துடன் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.இதன் எதிரொலியாக, வருவாய்த் துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பை அகற்றினர். 2015 கனமழையின் போது, ஆலப்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி, 144, 146, 147, 148 ஆகிய வார்டுகள் மூழ்கின.மழை ஓய்ந்தும், இந்த பகுதிகள், 10 நாட்களுக்கு மேல் வெள்ளத்தில் மிதந்தன.அதன் பின்னும், ஏரி ஆக்கிரமிப்பை அகற்றவோ, கரையை பலப்படுத்தி, ஏரியை ஆழப்படுத்தவோ, அதிகாரிகள் முன் வரவில்லை.ஆலப்பாக்கம் ஏரியை, பொதுப்பணித் துறை சிறந்த நீர்த்தேக்கமாக பராமரித்தால், வளசரவாக்கம் மண்டலத்திற்கே, இந்த ஏரி, நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி இருக்கும்.அப்பகுதியில், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கும். 2019 ஜூனில், ஆலப்பாக்கம் ஏரி அழிவின் விளிம்பில் உள்ளதாகவும், அதை காப்பாற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும் என, விரிவான செய்தி, நம் நாளிதழில் வெளியிடப்பட்டது.இதையடுத்து, ஏரியை துார் வாரி மேம்படுத்த, பொதுப்பணித்துறை, மாநகராட்சிக்கு ஒப்புதல் அளித்தது.இதையடுத்து, ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, 19 ஏக்கர் நிலத்தில், ஏரியை புனரமைக்க, 10.5 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.இந்த பணிகள், கொரோனா பரவல் காரணமாக தாமதமானது. தற்போது, எஞ்சியுள்ள ஏரியை, துார் வாரி கரைஅமைக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டது.பொதுப்பணித்துறை, ஏற்கனவே நில அளவை செய்து, ஆக்கிரமிப்புகளை கண்டறிந்துள்ளது.எஞ்சியுள்ள ஏரியை மட்டும் புனரமைத்தால், மீதமுள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க முடியாத நிலை ஏற்படும். இதனால், இப்பணிக்கு பொதுப்பணித்துறை எதிர்ப்பு தெரிவித்தது.இதனால், மீண்டும் ஏரி சீரமைப்பு பணிகள் முடங்கியுள்ளன.இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ஏரியை நில அளவை செய்ய, வருவாய் துறையிடம் கோரியுள்ளோம்.'மேலும், 4,000த்திற்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற, பொதுப்பணித்துறையிடம் கேட்டுள்ளோம். தற்போது, எஞ்சியுள்ள ஏரி பகுதியை துார் வாரி கரையமைக்க உள்ளோம்' என்றனர்.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆக்கிரமிப்புக்களை அகற்றி, ஏரியை முழுமையாக துார் வாரவே, மாநகராட்சிக்கு அனுமதி வழங்கிஉள்ளோம்.ஆனால், ஆக்கிரமிப்பை விட்டுவிட்டு, எஞ்சியுள்ள ஏரியை மட்டும் துார் வாரி, வேலையை முடிக்க அவர்கள் நினைக்கின்றனர். 'அப்படி செய்தால், ஏரி ஆக்கிரமிப்பை எப்போதுமே அகற்ற முடியாமல் போய்விடும். இதனால் தான், ஆக்கிரமிப்பை அகற்றி, துார் வாருங்கள் என்று கூறி இருக்கிறோம்' என்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X