சாயல்குடி,:சென்னை,மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சாயல்குடி பேரூராட்சிக்குட் பட்ட பகுதிகளுக்கு வந்து தொற்று கண்டறியப்பட்டால் தங்களை தனிமைப்படுத் திக்கொள்ள வேண்டும்என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சாயல்குடி வணிகர் சங்கத்தை சேர்ந்த எம்.செந்தில் கூறியதாவது:சாயல்குடி நகர் பகுதியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 20க்கும் மேற்பட்டோர் தொற்று உறுதியான நிலையில் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பில் உள்ள நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் முறையாக தனிமைப்படுத்தப்படவில்லை.கடைகளில் வியாபாரம் செய்கின்றனர். தெருக்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் சர்வ சாதாரணமாக நடமாடுகின்றனர்.
சாயல்குடி பகுதியில் இவர்களால் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி யுள்ளது. கொரோனா நோயாளிகளின் வீடுகளை தனிமைப்படுத்தியும், குடும்ப உறுப்பினர் களை வெளியே விடாம லும் தடுக்க சுகாதாரத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.