தரமணி பாலிடெக்னிக் வளாகத்தில் 300 படுக்கையுடன் தனிமை முகாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
01:18

அடையாறு, கொரோனா பரவலை தடுக்க, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சொந்தங்களை, தரமணி, பாலிடெக்னிக் வளாகத்தில் தங்க வைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.அடையாறு மண்டலம், 173வது வார்டு, வெங்கடாபுரத்தில் உள்ள, 200 வீடுகள் கொண்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்டோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.குடியிருப்பில் உள்ள மற்றவர்களுக்கு, தொற்று பரவுவதை தடுக்க, பாதிக்கப்பட்டவர்களின் சொந்தங்களை, தனியாக தங்க வைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்காக, தரமணி, தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லுாரியில், 300 படுக்கை வசதியுடன், முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று முதல், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சொந்தங்கள், அங்கு தங்க வைக்கப்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:ஒரு வீட்டில், யாராவது தொற்றால் பாதிக்கப்பட்டால், அவர்களுடன் வசிக்கும் உறவுகள் வழியாக, இதர குடியிருப்பில் வசிப்போருக்கு பரவ வாய்ப்புள்ளது.உறவுகளை தனியாக தங்க வைத்து, பரிசோதனை செய்கிறோம். தொற்று இல்லையென்றாலும், 10 நாட்கள் தங்க வைத்து, உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும், இலவசமாக செய்து கொடுக்கிறோம். இதன் மூலம், தொற்று பரவலை தடுக்க முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X