முதுகுளத்துார்:கீழக்காஞ்சிரங்குளம்பறவைகள் சரணாலயத்திற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே பறவைகள் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
முதுகுளத்துார் அருகே கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளது.கிராமத்தில் அடர்ந்த காடுகளும்,நீர்நிலைகளும் இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் இருந்து நத்தை, தலைக்கொத்தி, செங்கால்நாரை, கரண்டிவாய்மூக்கான், பிளம்மிங்கோ, நாரை, கொக்குவகைகள்,கூழக்கிடா உட்பட நுாற்றுக்கணக்கான பறவைகள் இங்கு வருகிறது.
அடர்ந்த மரங்களில் 6 மாதத்திற்கும் மேலாக தங்கி முட்டையிட்டு குஞ்சுகளை பொரித்து குஞ்சுகளுடன் பறவைகள் பறந்து செல்லும்.கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பருவமழை பொய்ப்பால் கண்மாய்,நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காடுகளுக்குள் இருக்கும் மரங்கள் பட்டுபோய் வேரோடு சாய்ந்தது.
சரணலாயத்தில் கருவேல்மரங்கள் சூழ்ந்து வரத்து கால்வாய்கள் இருந்த இடம் தெரியாமல் மணல்மேடாகி இருப்பதால் மழைநீர் தேங்குவதில்லை. தண்ணீர் இல்லாமல் பறவைகளும் வருவதில்லை.பறவைகள் சரணாலயத்தை காண சுற்றுலா பயணிகள், மாணவர்கள்வருகை தராததால் கிராமமே களையிழந்தது.