| வெறிச்சோடிய மதுரை ரோடுகள் விதிகளை மீறியோருக்கு அபராதம் Dinamalar
வெறிச்சோடிய மதுரை ரோடுகள் விதிகளை மீறியோருக்கு அபராதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
01:24

மதுரை, கொரோனா தொற்றை தவிர்க்க நேற்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதையடுத்து மதுரையில் முக்கிய ரோடுகள் வெறிச்சோடின.இம்மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி மதுரையில் வாகன நடமாட்டம் மிகுந்த ரோடுகள் வெறிச்சோடின. மருந்து, பால் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் மக்கள் வெளியில் வரவில்லை. வைகை பாலங்கள், முக்கிய ரோடுகள், சந்திப்புகளில் ஆங்காங்கு தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் கண்காணித்தனர். அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் திரிந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.இதற்கிடையில் கலெக்டர் வினய் கூறியுள்ளதாவது: காய்ச்சல், புளூ போன்ற அறிகுறிகள் இருந்தால் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் நடக்கும் மாநகராட்சி காய்ச்சல் முகாமில் பங்கேற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நண்பர்கள், உறவினர்கள் என நெருக்கமானவர்கள் தானே என பொது மக்கள் முகக்கவசம் அணியாமல் இருக்க கூடாது. முககவசம் அணியாததால்கொரோனா தொற்று அதிகம் உள்ளது. தொற்றை தவிர்க்க பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும், என கூறியுள்ளார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X