சமூக பொறுப்பில் சாதிக்கும் ரசிகர்கள் சொந்த நிதியில் ஊரணியை தூர் வாரி அசத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
01:39

விருதுநகர்:ஒரு காலத்தில் சினிமா தியேட்டர்களில் முண்டியடித்து டிக்கெட் வாங்குவது விசில் அடிப்பது ஹீரோ தோன்றும் காட்சிகளில் காகிதங்களை கழித்து திரையில் வீசி ஆர்ப்பறிப்பது போன்ற செயல்களில் ரசிகர்கள் ஈடுபடுவதை பார்த்திருக்கிறோம்.



அக்காலம் மலையேறி விட்டது. ரசிகர்கள் சமூக பொறுப்பு மிக்கவர்களாக மாறி வருகின்றனர். இதற்கு ரஜினி ரசிகர்கள் எடுத்துக்காட்டாகஉள்ளனர்.தேவையின்றி செலவு செய்து காசை கரியாக்காமல் மக்களுக்கு பயனுள்ள வகையில் சமுதாய பணியில் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது.



விருதுநகர் - அழகாபுரி செல்லும் வழியில் உள்ள அழகிய குக்கிராமம் செங்குன்றாபுரம். இங்குள்ள அவகாச்சி ஊரணி சீரமைக்காமல் புதர் மண்டி கிடந்தது. ஊரணியைசீரமைக்க ரஜினிமக்கள் மன்றத்தினர் முடிவுசெய்தனர்.இதற்காக கிராம மக்கள் ஒத்துழைப்புடன் தங்களின் சொந்த நிதியில் 2019 ஆக.,25ல் களம் இறங்கினர்.



ஊரணிக்கு மழை நீர் வரும் வரத்து கால்வாய்களை புனரமைத்தனர். கிராம மக்களுடன் இணைந்து ஊரணியை துார் வாரினர்.தற்போது மழை நீர் சொட்டு கூட வீணாகாமல் ஊரணியை வந்தடைகிறது. இக்கிராமத்தின் நிலத்தடி நீர் ஆதாரமும் மேம்படுத்தப்பட்டு உள்ளது.



பொதுப்பணித்துறைசார்பில் ரூ.பல கோடி மதிப்பில் குடிமராமத்து பணி டந்தும் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மட்டுமே ஒரு சில கண்மாய்களில் மழை நீர் காண முடிகிறது.ரஜினி ரசிகர்களின் சமூக பணியால் செங்குன்றாபுரம் ஊரணியில் தண்ணீர் ததும்பி காட்சியளிக்கிறது.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X