வியக்கவைக்கும் வெளிநாட்டு பறவைகள்:
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
01:42

சிவகாசி:பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பாடல் வரிக்கேற்க இவை ஒவ்வொன்றையும் பார்க்கும் போது மனதிற்கு ஓர் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. 5 செ.மீ., நீளம் 1.8 கிராம் எடை கொண்ட தாரிச்சிட்டிலிருந்து 9 அடி உயரம் 156 கிலோ எடைகொண்ட தீக்கோழி வரை ஏராளமான பறவை இனங்கள் உள்ளன.



உணவு, வெப்பம், குளிர் கால நிலைகளை தவிர்ப்பதற்காக பறவைகள் இடப்பெயர்ச்சி செய்கின்றன. இதற்காக சில பறவைகள் ஆண்டுக்கு ஆண்டு 32 ஆயிரம் கி.மீ., வரை பயணிக்கின்றன. இடப்பெயர்ச்சி செய்யும் போது பல அடையாளங்களைக் கொண்டு சரியான இடத்திற்கு சென்றடைகிறது. சூரியனின் திசை,இரவில் நட்சத்திரங்கள் , பூமியின் காந்த அலைகள் , நில அடையாளங்கள் , தனிப்பட்ட ஒலி வேறுபாடு போன்ற அடையாளங்களை கொண்டு சேர வேண்டிய இடத்திற்கு சென்றடைகிறது.



தமிழ்நாட்டில் வேதாரண்யம், வேடந்தாங்கள் என பல்வேறு சரணாலயங்கள் உள்ளன. இங்கு உள் நாட்டு பறவைகள் தவிர வெளிநாட்டு பறவைகளும் வருகிறது.ஆனால் சரணாலயமே இல்லாத சிவகாசி அருகே உள்ள சங்கரபாண்டியபுரம் கிராமத்தில் ஆஸ்திரேலியா, நைஜீரியா போன்ற வெளிநாடுகளிலிருந்து செங்கால் நாரை கூழை கிடா என ஏராளமான பறவைகள் வந்து தங்குகின்றன.ஜனவரி முதல் வாரத்தில் 10 லிருந்து 15 பறவைகள் வந்து இருப்பிடத்தை தேர்வு செய்துவிட்டு கிளம்பி விடுகின்றன. 20 நாட்களில் 1000 க்கு மேற்பட்ட பறவைகள் மொத்தமாக வந்து சேர்கின்றன.



ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள வீரம்மாள் ஊரணியை சுற்றிய மரங்களில் கூடு கட்டி வாழ்கின்றன. தங்களின் இனப்பெருக்கத்திற்காக வரும் இப்பறவைகள் மற்ற பறவைகளை போல் கூடு கட்டி முட்டை அடைகாத்து குஞ்சு பொறித்து அவை பறக்கும் நிலைக்கு வந்த உடன் ஆகஸ்டில் கிளம்பி விடுகின்றன. சிகோனிடே குடும்பத்தை சேர்ந்த இப்பறவைகள் நீண்ட செந்நிற கால், செந்நிற அலகுடன் 100 லிருந்து 115 செ.மீ., உயரத்தில் காணப்படுகின்றன.இதன் அருகிலுள்ள வெம்பக்கோட்டை, பிளவக்கல் அணைகளுக்கு சென்று இறைதேடி குஞ்சுகளுக்கும் கொடுக்கிறது.



இதற்காக இரவு 12:00 மணிக்கு கிளம்பி அதிகாலை 5:00 மணிக்கு வந்து விடுகிறது. தற்போது வெம்பக்கோட்டை, பிளவக்கல் அணையில் தண்ணீர் இல்லாததால் மணிமுத்தாறு சென்று மீன்களை கொண்டு வருகிறது. இப்பறவைகள் மொத்தமாக பறக்கையில் பார்க்கும்போது அழகாக காட்சியளிக்கிறது. கிராம குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் பார்த்து ரசிக்கின்றனர். அமைதியான சூழலை விரும்பும் இவற்றிற்கு கிராம மக்களும் எந்தவித தொந்தரவும் கொடுப்பதில்லை.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X