சேதமடைந்த குடிநீர் தொட்டி: அச்சத்தில் மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
01:50

விருதுநகர்:விருதுநகரில் சிதிலமடைந்து வரும் குடிநீர் தொட்டியால் ஹவுசிங் போர்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



சத்திரரெட்டியபட்டி ஊராட்சியில் ஹவுசிங் போர்டு மக்களுக்கு மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. 2 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட இந்த தொட்டி 1993ல் கட்டப்பட்டது. 15 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் துாண்கள் துார்ந்தும், படிக்கட்டுகள் சேதமடைந்தும் காணப்படுகிறது. மோட்டார் அறையின் மேற்கூரை சேதமடைந்து கம்பிகள் நீட்டிக் கொண்டுள்ளன.



30 அடி ஆழம் உள்ள தரைத்தொட்டியின் சிமென்ட் மூடி சேதமடைந்து பல்லிளித்து விட்டது. குடிநீர் தொட்டிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் குடியிருப்புகளில் விளையாடும் குழந்தைகள் குழிக்குள் விழும் அபாயம் நிலவுகிறது. இப்பகுதி மக்கள் தொட்டியை பராமரிப்பு செய்யக் கோரி கலெக்டர், ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் பயனில்லை.



தொட்டி திறந்த நிலையில் கிடப்பதால் விஷப்பூச்சிகள் தொட்டிக்குள் விழுகின்றனர். இதனால் குடிநீரை பயன்படுத்த மக்கள் அச்சப்படுகின்றனர். மக்கள் நலன் கருதி குடிநீர் தொட்டியை பராமரிக்க வேண்டும்.



வீணாகும் குடிநீர்



தொட்டியின் அவலம் குறித்து சீனிவாசன் எம்.எல்.ஏ., நேரில் பார்வையிட்டு உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. 15 வருடமாக குடிநீர் தொட்டி பராமரிக்கப்படவில்லை. தொட்டிக்குள் விஷப்பூச்சிகள் விழுவதால் பயன்படுத்த அஞ்சுகின்றனர்.-



]சுப்புராஜ், ஓய்வு கூட்டுறவு ஊழியர்.



விஷப்பூச்சிகள் சங்கமம்



குடிநீர் தொட்டியை சுற்றி புதர்மண்டி காணப்படுகிறது. தரைத்தொட்டியின் சேதமடைந்த பகுதி வழியாக குடிநீர் தேங்கும் பகுதியில் விஷப்பூச்சிகள் சென்று வருவதை பல முறை பார்த்திருக்கிறோம். குடிநீரை பயன்படுத்தவே சிரமமாக உள்ளது. புதிய குடிநீர் தொட்டியை அமைக்க முன்வர வேண்டும்.- ராணி, குடும்பத்தலைவி.



உயிர் பலி அபாயம்



சுற்றுச்சுவர் இல்லை. திறந்த நிலையில் தரைத்தொட்டி. விபத்து ஏற்படுவதற்கு இதை தவிர வேறு காரணம் வேண்டாம். ஒவ்வொரு நாளும் குடிநீரை ஏற்றுவதற்கு ஆபரேட்டர் சிரமப் படுகிறார். சிதிலமடைந்து வரும் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து உயிர் பலியாகவும் வாய்ப்புள்ளது.


- கவிஅரசு, கல்லுாரி மாணவர்.



விரைவில் பணிகள்





முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொட்டியை சுற்றிலும் வேலிகள் அமைக்கப்படும். விரைவில் குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.



- மருதுராஜ், ஊராட்சி தலைவர், சத்திரரெட்டியபட்டி.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X