பொது மக்கள் புகார்: வாட்ஸ் ஆப் விசாரணை சென்னையை பின்பற்றுவாரா போலீஸ் கமிஷனர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
02:25

மதுரை, :மதுரை நகரில் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் நிலையில், போலீஸ் ஸ்டேஷன்களை தொடர்ந்து கமிஷனர்அலுவலகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புகார்தாரர்களால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் சென்னையை போல்மதுரையிலும் வாட்ஸ் ஆப் மூலம் புகார்களை விசாரிக்க கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா முன்வரவேண்டும்.நகரில் கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். இதுவரை 171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 126 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 45 பேர் தொடர் சிகிச்சை பெறுகின்றனர். முன்னெச்சரிக்கையாக55 வயதை கடந்த, உடல்நலம் பாதித்த போலீசார் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டனர். போலீசாருக்கு மருத்துவ பரிசோதனையும்நடத்தப்பட்டது. இருப்பினும் கொரோனாவிடம் இருந்து போலீசார் தப்பமுடியவில்லை.கமிஷனர் அலுவலகத்தில் இயங்கும் குற்றப்பதிவேடு பிரிவில் 6போலீசாருக்கு கொரோனா உறுதியான நிலையில், அப்பிரிவு மூடப்பட்டது.சட்டம் ஒழுங்கு துணைகமிஷனர் அலுவலகத்தில் எஸ்.ஐ., பாதிக்கப்பட்டார். அடுத்தடுத்து போலீசார் பாதிக்கப்படுவதால் எஸ்.பி., அலுவலகம் போல் கமிஷனர் அலுவலகத்தையும் மூட வேண்டி வரும்.போலீசார் கூறியதாவது: புகார் கொடுக்க வருவோர் மூலம் கமிஷனர் அலுவலகத்தில் தொற்று பரவியது. இதை தவிர்க்கசென்னையில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வாரத்தில் 3 நாட்கள் வாட்ஸ் ஆப்மூலம் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கிறார். அதேபோல் மதுரையிலும் செயல்படுத்தினால் தொற்று தடுக்கப்படும், என்றனர்.கமிஷனராக பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்ற போது, 'கொரோனாகாலமான தற்போது மக்களிடம் எவ்வகையில் புகார் பெறுவது என்பது குறித்து பரிசீலிக்கப்படும்' என்றார். போலீசார் நலன்கருதி வாட்ஸ் ஆப் அல்லது புகார்பெட்டிகள் மூலம் புகார்களை பெற்று கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X