| அரசு ஊழியர்கள் வலியுறுத்தல் Dinamalar
அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
02:26

மதுரை :'புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற உதவ வேண்டும்,' என, மதுரையில் அமைச்சர் உதயகுமாரிடம் அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.மாநில பொது செயலாளர் செல்வம் தலைமையில் மாநில நிர்வாகிகள் ஞானதம்பி, தமிழ், நீதிராஜா உள்ளிட்டோர் சந்தித்து மனு அளித்தனர். பின் அவர்கள் கூறியதாவது: கொரோனா தடுப்பு பணியில் இறந்த அரசு ஊழியர்கள் அனைவரது குடும்பத்தினருக்கும் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். மேலும் அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான ஆள் எடுப்பை தடை செய்யும் அரசாணை எண் 54 ஐ ரத்து செய்வது, அகவிலைப்படி ரத்தை நீக்குவது, ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் பழனிசாமி கவனத்திற்கு கொண்டு செல்ல அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது, என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X