| ஆன்லைன் பதிவேற்றம்: சேவை மையத்தில் திணறல் Dinamalar
ஆன்லைன் பதிவேற்றம்: சேவை மையத்தில் திணறல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
02:54

வத்தலக்குண்டு:வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட 'ஆன்லைன்' பதிவேற்ற மனுக்களுக்கு வழிமுறை தெரியாததால் சேவை மையத்தினர் திணறுகின்றனர்.



கொரோனா பாதிப்பால், வருவாய்த்துறையில் முதியோர் பென்ஷன், இரு பெண் குழந்தைகள் நலநிதி, தாலிக்கு தங்கம், இலவச வீட்டு மனை பட்டா, விபத்து இறப்பு உள்ளிட்டவற்றுக்கு 'ஆன்லைன்' மூலமே மனுக்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அரசு அறிவித்தது.



இதற்கு என்னென்ன வகை ஆதாரங்கள், சான்றிதழ்கள் இணைக்க வேண்டும் என்பது தெரியாததால் இ-சேவை மையங்களில் மனுக்கள் பதிவேற்றுவதில் சிக்கல் உள்ளது. பொதுமக்கள் பலர் இ-சேவை மையங்களுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். ஊரடங்கு உள்ளதால் வீண் அலைச்சலை தவிர்க்க வழிமுறைகளை இ-சேவை மையங்களுக்கு விரைவில் அரசு அறிவிக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X