செய்திகள் சில வரிகளில்...திண்டுக்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
03:09

தொழிலாளி தற்கொலை



திண்டுக்கல்: இரண்டலப்பாறையை சேர்ந்த கூலித் தொழிலாளி ரீகல் இன்பராஜ் 30. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.ஊரடங்கால் 2 மாதமாக வேலையில்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன் -மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஜூலை 5 ம் தேதி ரீகல் இன்பராஜ் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். நேற்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.



12 பேர் மீது வழக்கு



வடமதுரை: நந்தவனப்பட்டி முத்தம்மாள் 69. இவரது தோட்டத்திற்கு அமைத்த முள் வேலியை தீ வைத்து எரித்த அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி, மாரியம்மாள், மகேஸ்வரன் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதே தகராறில் எதிர் தரப்பை சேர்ந்த பொன்னர், திருப்பதி உட்பட 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


சோதனை முடிவில் தாமதம்



ஒட்டன்சத்திரம்: கமிஷன் கடை உரிமையாளருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, தினமும் மார்க்கெட் தொழிலாளர்களின் சளி, ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப் படுகிறது. கடந்த 3 நாட்களாக முடிவு வரவில்லை. இதனால் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டவர்கள் தங்களுக்கு தொற்று இருக்கிறதா, இல்லையா என தெரியாமல் மன உளைச்சலில் உள்ளனர். டாக்டர்களும் பரிசோதனை முடிவு தெரியாமல் சிகிச்சை அளிக்க முடியாமல் உள்ளனர்.



நத்தத்தில் பலி 5



நத்தம்: இப்பகுதியில் ஜூன் துவக்கத்தில் முதல் உயிரிழப்பு பதிவானது. ஊரடங்கு தளர்வுக்கு பின் மதுரை சென்று வந்தவர்களால் பாதிப்பு அதிகரிக்க துவங்கியது.சமீபத்தில், அண்ணா நகர் 45 வயது ஆண், மீனாட்சிபுரம் முதியவர், வலையபட்டி இளைஞர் என அடுத்தடுத்து உயிரிழந்தனர். நேற்று முன்தினம் 46 வயது ஆண் ஒருவர் உயிரிழந்ததன் மூலம் இதுவரை 5 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.



27 பேர் டிஸ்சார்ஜ்



திண்டுக்கல்: கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. அதே சமயம் குணமாகி வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. நேற்று திண்டுக்கல் -9, நிலக்கோட்டை -13, நத்தம் -2, ஒட்டன்சத்திரம், பழநி, கொடைரோட்டில் தலா ஒருவர் என மொத்தம் 27 பேர் குணமாகியுள்ளனர். இதில் 14 ஆண்கள், 11 வயது சிறுமி உட்பட 13 பெண்கள், 5 முதியவர்கள் அடங்குவர்.



முகக்கவசம் அணியுங்க



வேடசந்துார்: இப்பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நோய் பரவலை தடுக்க,அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இல்லையெனில் பொருட்கள் வழங்க கூடாது என, வேடசந்துார் அனைத்து வர்த்தகர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.



பல்கலை ஊழியர்களுக்கு பரிசோதனை



கொடைக்கானல்: தெரசா பல்கலை துணை வேந்தருக்கு தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த பல்கலை ஊழியர்களையும் பரிசோதிக்க சுகாதாரத் துறை முடிவு செய்தது. அதன்படி, இரு டிரைவர், அலுவலக பணியாளர்கள் உட்பட 7 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. மேலும் 100 பேரை தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.



குருவணக்க நிகழ்ச்சி



பழநி: தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் காணொளி காட்சியில் குருவணக்க நிகழ்ச்சி நடந்தது. மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இணை இயக்குனர் குமார் தலைமை வகித்தார். தர்மரஷண சமிதி தலைவர் ஓங்காரநந்த சுவாமிகள் பேசினார். தேசிய தலைவர் சிங்கால், மாநில தலைவர் திரிலோகசந்திரன் பங்கேற்றனர். பொதுச்செயலாளர் கந்தசாமி நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X