ஆஷா பணியாளர்கள் நியமனம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
07:10

புதுச்சேரி; ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஆஷா பணியாளர்கள் நியமிக்கப்பட்டுவருவதால், சிபாரிசு கடிதம் பெற எம்.எல்.ஏ.,க்களின் வீடுகளுக்கு பெண்கள் படையெடுத்து வருகின்றனர்.வட மாநிலங்களில் சுகாதார பணியில் ஆஷா பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கர்ப்பிணி பெண்களுக்கான ஆலோசனைகள், கருத்தடை, போலியோ சொட்டு மருந்து, தடுப்பூசி வழிமுறைகள், டெங்கு விழிப்புணர்வு உள்ளிட்ட பல சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதற்காக, அவர்களுக்கு மத்தியஅரசு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்குகிறது.மேலும், சுகாதார மேம்பாட்டு திட்டத்தில் மேற்கொள்ளும் ஒவ்வொரு பணிக்கும், அதாவது கர்ப்பிணிகள் கவனிப்பு, டெங்கு விழிப்புணர்வு உள்ளிட்டவைக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.புதுச்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 2019 அக்டோபர் மாதத்தில் ஆயிரம் பேருக்கு ஒருவர் வீதம் 400 ஆஷா பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.கொரோனா பரவல் துவங்கிய மார்ச் மாதத்தில் ஆஷா பணியாளர்கள் வேலை தீவிரமானது. கொரோனா பணியால், ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் கூடுதலாக ஆஷா பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.கொரோனா தொற்று நபர்களை கண்டறிதல், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை ஆர்சானிக் ஆல்பம் வழங்கல், கர்ப்பிணிகள், தொற்றா நோய்களான நீரிழிவு, ரத்த அழுத்தம் பாதித்தவர்கள் மற்றும் முதியோர்கள் குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர். தற்போது, மீண்டும் ஆஷா பணியாளர்கள் எண்ணிக்கை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரியில் அரசு வேலை என்பது, பகல் கனவாகிவிட்டது. பொதுத்துறை அரசு நிறுவனங்களில் சம்பளம் வழங்கப்படவில்லை.இந்த நிலையில், ஆஷா பணியாளர்களுக்கு மத்திய அரசு நேரடியாக ஊக்க தொகை அளிப்பதால், ஆஷா பணியாளராக சேர பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.எம்.எல்.ஏ.,க்கள் சிபாரிசில் வருபவர்கள் எவ்வித விசாரணையும் இன்றி, நேரடியாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆஷா பணியாளர்களாக சேர்க்கப்படுகின்றனர்.இதனால், சிபாரிசு கடிதம் பெற்றிட பெண்கள், எம்.எல்.ஏ.,க்களின் வீடுகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X