மத்திய அரசின் ஒப்புதல் வராமல் அமைச்சரவை கூடியது ஏன்: மாஜி எம்.பி., ராமதாஸ் கேள்வி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
07:11

புதுச்சேரி; மத்திய அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் வராதா நிலையில், பட்ஜெட் குறித்து விவாதிக்க அமைச்சரவை கூட்டியது ஏன் என்று முன்னாள் எம்.பி.,ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கை:அரசின் நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசிடமிருந்து அதிகாரப்பூர்வமான ஒப்புதல் கடிதம் வராமலே பட்ஜெட் பற்றி விவாதிக்க அமைச்சரவையை கூட்டி 5 நிமிடங்களில் கலைத்திருப்பது இந்த அரசின் திறமையின்மையை காட்டுகிறது.அரசு விதிப்படி எதுவுமே வாய்மொழி உத்தரவு மூலம் நடக்கக்கூடாது. எழுத்துப்பூர்வமான கடிதத்தின் அடிப்படையில் தான் ஒரு அரசு முடிவு எடுக்க வேண்டும். அப்படி இருக்கும் போது அமைச்சரவையை கூட்டியது ஏன்?புதுச்சேரிஅரசு அனுப்பிய பட்ஜெட்டின் எல்லா முடிவுகளுக்கும் மத்திய அரசு உத்தரவு கொடுத்து உள்ளதா? முடிவுகளை மாற்றி இருக்கிறதா? பட்ஜெட் நிதிக்கு ஒப்புதல் கொடுத்து இருக்கிறதா? என்ற விவரங்கள் எல்லாம் எழுத்துப்பூர்வ கடிதத்தில் தான் தெரியும். இந்த அடிப்படை ஆவணம் இல்லாமல் அமைச்சரவையில் எப்படி பட்ஜெட்டை பற்றி விவாதிக்க முடியும்.கடந்த பிப்ரவரி மாதமே பட்ஜெட் தயாரிப்பு வேலைகள் நடந்து மார்ச் மாதமே பட்ஜெட் சமர்ப்பித்து இருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டியபோது முதல்வர்பட்ஜெட் ஆவணத்தை கவர்னருக்கு பிப்ரவரி மாதத்திலேயே அனுப்பினோம். அதற்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திவிட்டார் என்று கூறினார்.இது தவறு. தன் சக்திக்கு மீறிய பட்ஜெட் தொகையை அனுப்பியதால் மத்திய அரசு கேள்வி கேட்டு விளக்கம் பெறுவது ஒரு இயற்கையான நிகழ்வு தானே தவிர காலதாமதம் அல்ல.இந்த ஆண்டுதான் மாநில திட்ட வாரியத்தின் ஒப்புதலை பெறாமல் பட்ஜெட்டின் நிதி அளவு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஜனநாயக மரபை மீறிய செயல்.புதுச்சேரியின் மாண்பையும், புகழையும் குறைக்கும் செயலாக அமைந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X