| 15 சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் Dinamalar
15 சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
09:04

ஆத்தூர்: ஆத்தூர், அரசநத்தம் ஊராட்சி, கந்தசாமிபுதூரைச் சேர்ந்த, விவசாயி மணி, 52. இவர், தன் விவசாய நிலத்தில், 10 ஆண்டுக்கு மேலாக, வனத்துறையினர் அனுமதியுடன், சந்தன மரங்களை வளர்த்து வருகிறார். கடந்த, 10 நள்ளிரவில், தோட்டத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள், 15 மரங்களை வெட்டி கடத்திச்சென்றனர். நேற்று முன்தினம், இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயி, ஆத்தூர் வனத்துறையினர், மல்லியக்கரை போலீசில் புகார் அளித்தார். போலீசார், மரங்களை வெட்டி கடத்திய மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X