ரயில்வே தொழில் நுட்ப வல்லுனருக்கு தொற்று; 194 பேரை தனிமைப்படுத்திய அதிகாரிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
09:05

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி, 46 புதூர் பஞ்., பெரிய செட்டிப்பாளையம், ஸ்ரீசக்தி கார்டன் பகுதியை சேர்ந்த, 41 வயது ஆண், ஈரோடு ரயில்வே துறையில், முதுநிலை தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றுகிறார். கடந்த மாதம், 22ல் பணி நிமித்தமாக, கர்நாடக மாநிலம் மங்களூரு சென்று, 15 நாட்கள் கழித்து, கடந்த, 7ல் ரயிலில் ஈரோடு திரும்பினார். ஈரோடு அரசு மருத்துவமனையில், பி.சி.ஆர்., பரிசோதனை நடந்ததில், நேற்று முன்தினம் தொற்று உறுதி செய்யப்பட்டது. பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் வசிக்கும் பகுதியில், 67 வீடுகளில், 194 பேரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.


அரசு ஊழியருக்கு...: மொடக்குறிச்சி, கஸ்பாபேட்டை பஞ்., முள்ளாம்பரப்பு அருகே, முல்லைநகரை சேர்ந்த, 65 வயது முதியவருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், ஈரோடு, அசோகபுரத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் பணியாற்றி வருகிறார். இதையடுத்து முல்லைநகரில், 29 வீடுகளை தனிமைப்படுத்தி, 104 பேருக்கு, கொரோனா பரிசோதனை நடத்தியுள்ளனர்.


ஆர்.டி.ஓ., அலுவலகம் மூடல்: பாசூர், மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்த, 25 வயது பெண், சின்னியம்பாளையத்தில் உள்ள, ஈரோடு கிழக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகில், ஒரு ஜெராக்ஸ் கடையில் பணிபுரிகிறார். ஆர்.டி.ஓ., அலுவலக பணியாளர்களுக்கு, கடந்த வாரம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்போது, அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து பாசூரில் பெண் வசிக்கும் வீட்டருகே, 10 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன. இதையடுத்து, ஈரோடு கிழக்கு ஆர்.டி.ஓ, அலுவலகம் நேற்று முன்தினம் மூடப்பட்டது. நாளை செயல்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அந்தியூர் இன்ஜினியருக்கு....: அந்தியூர் அருகேயுள்ள நகலூர், கொண்டையம்பாளையம், செங்குட்டைத்தோட்டத்தை சேர்ந்த, 25 வயது ஆண், பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். கடந்த, 10ல் ஊர் திரும்பிய அவருக்கு, பி.சி.ஆர்., பரிசோதனை நடந்தது. நேற்று மதியம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரது குடும்பத்தை சேர்ந்த மூவருக்கும், பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்பட்டது. வாலிபர் வசிக்கும் பகுதியில் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


மாநகராட்சியில் மகிழ்ச்சி: தொற்று பகுதியில் பணியாற்றும், மாநகராட்சி ஊழியர்களுக்கு, மாதம் ஒரு முறை சளி பி.சி.ஆர்., சோதனை நடக்கிறது. இதன்படி, ஈரோடு மாநகராட்சியில் கமிஷனர் உள்ளிட்ட, 40 பணியாளர்களுக்கு, பி.சி.ஆர்., பரிசோதனை நேற்று முன்தினம் செய்யப்பட்டது. நேற்று வெளியான முடிவில், அனைவருக்கும் நெகட்டிவ் என வந்ததால், அனைவரும் நிம்மதி அடைந்தனர்.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X