நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
10:07

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், ஏப்., 1 முதல், இதுவரை, 162 பேர், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், லாரி டிரைவர் ஒருவர் இறந்தார். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை சேர்ந்த, 29 வயது பெண், 57 வயது பெண், சேந்தமங்கலம், மேற்கு பாஜல் தெருவை சேர்ந்த, 19 வயது இளைஞன், 47 வயது பெண் ஆகிய, நான்கு பேர், ஏற்கனவே, தொற்றில் இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும், திருச்செங்கோட்டை சேர்ந்த, 28 வயது இளம் பெண், நாமக்கல், மாதாகோவில் தெரு, கணேசபுரத்தை சேர்ந்த, 42 வயது ஆண், கணேசபுரம் புதுத்தெருவை சேர்ந்த, 46 வயது ஆண், நாமக்கல் வசந்தபுரத்தை சேர்ந்த, 30 வயது பெண் ஆகிய நான்கு பேரும், ஏற்கனவே தொற்றில் இருந்தவர்களிடம் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதேபோல், பொத்தனூர் நல்லாயி காட்டு தெருவை சேர்ந்த, 36 வயது பெண், ஆனங்கூரை சேர்ந்த, 28 வயது பெண், கொந்தளம் அடுத்த எம்.கருக்கம்பாளையத்தை சேர்ந்த, 21 வயது இளைஞர், இவர்கள் மூன்று பேரும் கரூர் தனியார் நூற்பாலையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கும், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. குமாரபாளையத்தை சேர்ந்த, 65 வயது மூதாட்டி, ஈரோடு சென்று வந்துள்ளார். அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 174 ஆக அதிகரித்துள்ளது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X