கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணி மீண்டும் துவங்க நடவடிக்கை தேவை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
23:18

கம்மாபுரம்; கிடப்பில் போடப்பட்ட விருத்தாசலம் -- புவனகிரி சாலை மேம்பாட்டு பணியை, விரைந்து துவங்க வேண்டும்.


விருத்தாசலம் - புவனகிரி வரையிலான 36 கி.மீ., துார சாலை, தரம் உயர்த்தப்பட்டு, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.162 கோடியே 41 லட்சத்து 9 ஆயிரத்து 975 மதிப்பில் மேம்பாடு பணி நடக்கிறது.கடந்த 2015 ஜூலை மாதம் துவங்கிய இப்பணி, 2018 ஜனவரி மாதம் முடிவடைய வேண்டும். அதன்படி, சாலை விஸ்தரிப்பு, பாலங்கள், கல்வெர்ட் கட்டும் பணிகள் முழுமையாக நடக்கவில்லை. ஆமை வேகத்தில் வேலை நடந்ததால், டெண்டர் காலாவதியானது.இச்சாலையில் வாகனங்கள் செல்லும்போது ஜல்லி, செம்மண் கலந்த கலவையாக புழுதி பறக்கிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. சாலையோர வீடுகள் முழுவதும் புழுதி படர்ந்து, நிறம் மாறிய நிலையில் உள்ளன. இப்பணி துவங்கி, 20 கி.மீ., துாரம் கூட முழுமை பெறவில்லை.கடந்த 2020 மார்ச் மாதம் மீதமுள்ள சாலை மற்றும் கல்வெர்ட் மேம்படுத்த டெண்டர் விடப்பட்டது. இதுநாள் வரை பணி துவங்கவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.கிடப்பில் போடப்பட்ட விருத்தாசலம் - புவனகிரி சாலை மேம்பாட்டு பணியை விரைந்து துவங்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X