| அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்: கட்டட நிலம் ஒதுக்குவதில் இழுபறி Dinamalar
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்: கட்டட நிலம் ஒதுக்குவதில் இழுபறி
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
23:53

உடுமலை:உடுமலை வட்டாரத்திலுள்ள, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, கட்டடம் கட்ட நிலம் ஒதுக்குவதில் இழுபறியாகி வருகிறது.உடுமலை ஒன்றியத்தில், எரிசனம்பட்டியில், 30 படுக்கைகளுடன் கூடிய, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும், 31 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. பெரும்பாலானசுகாதார நிலையங்கள், சொந்த கட்டடத்தில் இயங்கி வருகின்றன.மலைவாழ் மக்கள் குடியிருப்பான மாவடப்பு, பாலப்பம்பட்டி, சின்ன வாளவாடி, அமராவதி நகர் ஆகிய துணை சுகாதார நிலையங்கள், வாடகைக் கட்டடங்களில், போதிய வசதிகள் இல்லாமல், சிறிய அறைகளில் இயங்கி வருகின்றன. தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில், சிகிச்சை அளிப்பது மற்றும் கொரோனா சமூக இடைவெளி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது.வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில், அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தும் வகையில், சொந்தக்கட்டடம் கட்டுவதற்கு, சுகாதாரத்துறை சார்பில், 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.கட்டடங்கள் கட்டுவதற்கு, மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை மூலம், அரசு நிலங்கள் கண்டறியப்பட்டு, ஒதுக்கீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், வருவாய்த்துறை சார்பில், நிலம் ஒதுக்கீடு செய்யவில்லை.அதே போல், மாவடப்பு மலைவாழ் மக்கள் குடியிருப்பில், சுகாதார நிலையம் அமைக்க வனத்துறை நிலம் ஒதுக்கவில்லை. எனவே, கிராமங்களில் அனைத்து வசதிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் வகையில், புதிய கட்டடம் கட்டி, மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அமராவதி நகர், சின்ன வாளவாடி, பாலப்பம்பட்டி சுகாதார நிலையங்களுக்கு, நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு, நிலம் ஒதுக்கி தர மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. வருவாய்த்துறையினர், அரசு நிலம் ஒதுக்கி தந்தால் கட்டடம் கட்டப்படும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X