கடலுார்; வீட்டின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், தீப்பிடித்து எரிந்து சேதமானது.கடலுார், கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், 33; இவர், தனது வீட்டின் பின்புறம் தனது தம்பி பிரதீப் என்பவருக்கு சொந்தமான பி.ஒய்.01-சி.என்.6121 பதிவெண் கொண்ட மாருதிபிரீசா காரை நேற்று முன்தினம் இரவு நிறுத்தி வைத்தார்.நள்ளிரவில் கார் திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த கடலுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.இருப்பினும் தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து சேதமானது. சேத மதிப்பு 7 லட்சம் ரூபாய் ஆகும். தீ விபத்துக்கான காரணம் குறித்து கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.