பகுதி நேர வேலைவாய்ப்பு: கல்லூரி மாணவர்கள் ஆர்வம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
23:54

உடுமலை:கொரோனா ஊரடங்கு காரணமாக, பலரும் பணியிழக்கும் சூழல் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டுள்ளது. மேலும், சில பகுதிகளில் வெவ்வேறு மாவட்டங்களுக்கு பணிக்குச் செல்வதால், தற்போது அதற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடுமலை சுற்றுப்பகுதியில் வணிக வளாகங்களில் வடமாநிலத்திலிருந்தும், அருகிலுள்ள மூணார், மறையூர், கோவை, தென் மாவட்டங்களிலிருந்தும், பலரும் பணி செய்கின்றனர்.


இப்பகுதியில் வாடகை வீடுகளில் தங்கி பணிக்கு செல்வதும், விடுமுறை நாட்களில் வீடு திரும்புவதுமாக இருந்தனர். மேலும், மூணார் மற்றும் மறையூர் பகுதிகளிலிருந்து தினசரி பணிக்கு வருவோரும் பலர் உள்ளனர். தற்போது, கொரோனா ஊரடங்கு போடப்பட்டுள்ளதால், மற்ற மாவட்டங்களுக்கும், மாநிலத்திலிருந்தும் இங்கு வர முடியாத நிலை உள்ளது.இருப்பினும், சிலர் இ-பாஸ் பதிவு செய்து வந்து செல்கின்றனர். ஆனால், பலருக்கும் வந்து செல்ல போக்குவரத்து வசதியின்மை போன்ற காரணங்களால் பணிக்கு வர முடியாமல் உள்ளனர்.வணிக வளாகங்கள் ஒரு மாதம் ஏற்கனவே மூடப்பட்டிருந்தால், தற்போது விற்பனையை தீவிரமாக்க முயற்சி செய்கின்றனர்.


இதனால், தற்காலிக பணியாளர்களை அதிகம் நியமித்து, வணிக வளாகங்களை செயல்படுத்துகின்றனர்.கல்லுாரி மாணவர்கள், பொருளாதார நிலையால், பலரும் பகுதி நேர பணிக்குச்செல்வது உண்டு. கொரோனா பாதிப்பு முடியும் வரை மட்டுமே பணி என்ற நிலையால், கல்லுாரி மாணவர்களை, பணியாளர்களாக பல வணிக வளாகங்களிலும் நியமித்துள்ளனர்.மேலும், விடுமுறையை பயனுள்ளதாக மாற்றவும், பொருளாதார நிலையில் குடும்பத்துக்கு உதவும் வகையிலும், மாணவர்கள் பகுதி நேர பணியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X