சங்கனூர் ரோட்டில் சம்திங் ஸ்பெஷல்! சரக்குக்கு 'எஸ்'; சாயாவுக்கு 'நோ'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

14 ஜூலை
2020
03:57
பதிவு செய்த நாள்
ஜூலை 14,2020 00:14

கோவை:கோவையில் சங்கனுார் ரோட்டில், கட்டுப்பாட்டுப்பகுதிக்கு அருகிலுள்ள, அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்த நிலையில், அரசின் மதுக்கடை மட்டும் திறக்கப்பட்டதால், மற்ற கடைகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இதனால், நோய் தொற்று அபாயம் அதிகரித்துள்ளது.


கோவை-சங்கனுார் ரோட்டில், காமராஜபுரம் மற்றும் ராயப்பா லே-அவுட் ஆகிய இரண்டு பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ரோட்டின் வடக்கு, தெற்கு என எதிரெதிரே அமைந்துள்ள இவ்விரண்டு பகுதிகளுக்கும், இடையில் சுமார் 150 மீட்டர் மட்டுமே இடைவெளி இருக்கிறது. இதனால் சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்துக்கடைகளையும் மூட, கடந்த வாரம் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


இதையடுத்து, அனைத்துக்கடைகளையும் வியாபாரிகள் மூடி விட்டனர். ஆனால் இரண்டு பகுதிகளுக்கும் இடையில் அமைந்துள்ள, டாஸ்மாக் மதுபானக்கடை (கடை எண்: 1553) மட்டும் மூடப்படவில்லை. இத்தனைக்கும் காமராஜபுரத்திலிருந்து வெறும், 100 அடி துாரத்தில்தான் இந்தக் கடை அமைந்துள்ளது. மதுக்கடையில் குடிகாரர்களின் கூட்டம் வாயிலாக, பலருக்கும் தொற்று பரவ வாய்ப்புள்ளது.


இது குறித்த நமது தகவலின்படி, நேரில் ஆய்வு செய்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தாஜூதீன், ''அப்பகுதியில் ஒரு வீடு மட்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியே தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே, மதுக்கடையையும் மூட வேண்டிய அவசியம் ஏற்படும். அருகிலுள்ள மற்ற கடைகளும், இப்போது திறக்கப்பட்டுள்ளன,'' என்றார்.கடந்த ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் இருந்ததால், கடந்த சனிக்கிழமை வரையிலும், மற்ற கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் மதுக்கடையே திறந்திருக்கும்போது, நாமும் கடையைத் திறந்தாலென்ன என்ற எண்ணத்தில், மற்ற கடைகளும் திறக்கப்பட்டிருக்கலாம்.பாதிப்பு அதிகமாவதற்குள் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பது நல்லது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜூலை-202008:02:41 IST Report Abuse
அருணா இத இதத்தான் கட்சிகள் எதிர்பார்க்கின்றன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X