பேங்கோ வீதியில் குப்பைத் தொட்டி பார்க்கிங்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2020
00:19

இப்படி குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தினால் எப்படி

பாதாள சாக்கடை குழியால் சிரமம்குறிச்சி, முருகா நகரில், பாதாள சாக்கடை பணிக்காக, சாலையின் நடுவில் அமைக்கப்பட்டு வரும் மேன்ேஹாலுக்கு கான்கிரீட் அமைக்கும் பணியை, விரைந்து முடிக்க வேண்டும்.- ராஜேந்திரபிரசாத், முருகா நகர்.

குப்பை தொட்டிகளை ஓரமா வைக்கணும்கவுண்டம்பாளையம், பேங்கோ வீதியில், சாலையை ஆக்கிரமித்து, போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள, குப்பை தொட்டிகளை, இடம் மாற்றி, சாலையோரம் வைக்க வேண்டும்.- வேலுசாமி, பேங்கோ வீதி.

சாக்கடை கால்வாயை துார்வாரணும்மாநகராட்சி, 40வது வார்டுக்கு உட்பட்ட, ஆவராம்பாளையம், எம்.ஜி.ரோட்டில் சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் செல்ல வழியின்றி உள்ளது. இக்கால்வாயை துார்வார வேண்டும்.- வாசுதேவன், ஆவராம்பாளையம்.

குண்டும் குழியுமான ரோடுமாநகராட்சி, 42வது வார்டுக்கு உட்பட்ட, உடையாம்பாளையம், சரவணா பேக்கரி அருகில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலையை செப்பனிட வேண்டும்.- உஷா, உடையாம்பாளையம்.

வாகன ஓட்டிகளை மிரட்டும் குழிவடவள்ளி, வள்ளலார் நகர், தக் ஷா அபார்ட்மென்ட் முன், குழாய் உடைப்பால், தண்ணீர் தேங்கியது. குழாய் உடைப்பை சரி செய்த, ஊழியர்கள், இதற்காக தோண்டிய குழியை முறையாக மூடாமல் சென்று விட்டனர். தற்போது இக்குழியால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.- நரசிம்மன், வள்ளலார் நகர்.

மின் கம்பத்தை மாற்றணும்மாநகராட்சி, 41வது வார்டுக்கு உட்பட்ட, மாணிக்கவாசக நகரில், சிதிலமடைந்துள்ள மின் கம்பத்தை மாற்ற வேண்டும்.- இளங்கோ, மாணிக்கவாசக நகர்.

வாகன ஓட்டிகள் அவதிசுக்கிரவார் பேட்டை வீதியில், சாலை இரண்டாக பிளக்கப்பட்டு குழியாக உள்ளது. வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.- தண்டபாணி, சுக்கிரவார் பேட்டை.

விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 12வது வார்டுக்கு உட்பட்ட, கே.கே.புதுார், ரமணி வீதியில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 170), பல மாதங்களாக விளக்கு எரிவதில்லை. மின் வாரியத்தில் புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.- பாஸ்கரன், ரமணி வீதி.

மின் கம்பத்தை இடம் மாற்றணும்மாநகராட்சி, 62வது வார்டுக்கு உட்பட்ட, சிங்காநல்லுார், கிருஷ்ணாபுரத்தில், சாலையின் நடுவில் உள்ள மின் கம்பத்தை, இடம் மாற்றி அமைக்க வேண்டும். ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள, கட்டடங்களையும் அப்புறப்படுத்த வேண்டும்.- அபு, கிருஷ்ணாபுரம்.

மின் விபத்து அபாயம்சேரன் மாநகர், மவுனசாமி நகர் பிரதான ரோடு மற்றும் இதை சுற்றியுள்ள பகுதிகளில், குடியிருப்புகளுக்கான மின் இணைப்பு ஒயர்களின் மேல், தனியார் இணைய கேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன. பலத்த காற்று வீசும்போது, மின் ஒயர்கள் அறுந்து விழும் நிலையில் உள்ளன.- ஜெய், மவுனசாமி நகர்.

சிதிலமடைந்த மின் கம்பம்சர்க்கார் சாமக்குளம், பேரூராட்சி அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள, மின் கம்பம் சிதிலமடைந்து விழும் நிலையில் உள்ளது. மின் விபத்து ஏற்படும் முன், இக்கம்பத்தை அகற்றி விட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.- ராஜேஷ், கோவில்பாளையம்.

சாக்கடை கால்வாய் மூடி உடைப்புசுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 பகுதியில், சாக்கடை கால்வாய் மூடி உடைந்துள்ளது. குழந்தைகள் விழுந்து விபத்துக்குள்ளாகும் முன், இதை சரி செய்ய வேண்டும்.- அஜய், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X