வெள்ளகோவில்:சமூக இடைவெளியின்றி, கடைகளில் மக்கள் அலைமோதுவதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வெள்ளகோவில் நகராட்சி மக்கள், ஞாயிறு தோறும் நடக்கும் வாரச்சந்தையில், ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறி வாங்குவர். ஊரடங்கால், பொதுமக்கள் அதிகம் கூடுவதால், சந்தை மூடப்பட்டது.இதனால், சனிக்கிழமை புது பஸ் ஸ்டாண்ட் எதிரில், இந்திரா நகர் பிரிவு ஆகிய இடங்களில், வியாபாரிகள், 50க்கும் மேற்பட்ட கடை அமைத்து, காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். ஆனால், சமூக இடைவெளி சுத்தமாக இல்லை.பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வரு கின்றனர். எனவே, உரிய பாதுகாப்பு நடவடிக்கையை பின்பற்றுமாறு, நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.