| குடிநீர் இணைப்புக்கு மீண்டும் 'டிபாசிட்' செலுத்த நோட்டீஸ்: பஞ்., அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை Dinamalar
குடிநீர் இணைப்புக்கு மீண்டும் 'டிபாசிட்' செலுத்த நோட்டீஸ்: பஞ்., அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2020
10:13

சேந்தமங்கலம்: குடிநீர் இணைப்புக்கு, மீண்டும் வைப்பு தொகை (டிபாசிட்)செலுத்த வேண்டும் என, நோட்டீஸ் அனுப்பியதால், அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், கொண்டமநாயக்கன்பட்டி பஞ்., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சேந்தமங்கலம் அடுத்த கொண்டமநாயக்கன்பட்டியில், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, பேரமாவூர், எல்லிபாளையம், கணபதி நகர் உள்ளிட்ட கிராமங்களுடன், ஒன்பது வார்டுகள் உள்ளன. இங்கு, 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களிடம், 2008-09ல், 1,385 குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக, 1,300 முதல், 3,000 ரூபாய் வரை வைப்பு தொகையாக பெற்றுள்ளனர். இந்நிலையில், ஊராட்சி பதிவேட்டில், 914 குடிநீர் இணைப்புகள் மட்டுமே பதியப்பட்டிருந்தநிலையில், மீதம் உள்ள, 571 குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்கள், வைப்பு தொகையாக, 1,300 ரூபாய் மீண்டும் செலுத்த வேண்டும் என, ஊராட்சி நிர்வாகம் சார்பில், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதனால், அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், ஏற்கனவே, குடிநீர் இணைப்புக்காக செலுத்திய ரசீதுடன், ஊராட்சி அலுவலகத்தை, நேற்று காலை, 11:00 முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த ஊராட்சி தலைவர் வெங்கடேஸ்வரி, துணைத்லைவர் ராசு ஆகியோர் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, 'உங்கள் கோரிக்கை குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரைகுடிநீர் இணைப்பை துண்டிக்க மாட்டோம்' என, உறுதி அளித்தனர். அதையடுத்து, அரை மணி நேரம் நடந்த முற்றுகை போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X