| கோவையில் தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தில் 4 பேருக்கு கொரோனா Dinamalar
கோவையில் தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தில் 4 பேருக்கு கொரோனா
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

14 ஜூலை
2020
17:36
பதிவு செய்த நாள்
ஜூலை 14,2020 17:33

கோவை: கோவை ராக்கிபாளையத்தில் உள்ள பிரபல தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தில், நான்கு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அந்நிறுவனம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது.



ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்




கோவை துடியலூரை அடுத்த ராக்கிபாளையத்தில் பிரபல தங்க நகை தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவன குழுமத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும் அந்நிறுவனத்தின் விடுதியில் தங்கி பணிபுரிகின்றனர்.

இந்த நிலையில், விடுதியில் தங்கி வேலை செய்து வரும் ஆண் ஊழியர் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விடுதியில் அவருடன் தங்கியிருந்த 9 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில், மேலும் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.




இதையடுத்து, நிறுவனம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. அந்த நிறுவனமும் அருகில் இருந்த அதன் கிளை நிறுவனமும் தற்காலிகமாக மூடப்பட்டன. அதேபோல், விடுதியில் உள்ள அனைத்து ஊழியர்களையும் தனிமைப்படுத்த சுகாதாரத்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X