| 'சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பதிவிட வேண்டாம்' Dinamalar
'சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பதிவிட வேண்டாம்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2020
00:53

கூடலுார்:'கொரோனா தொற்று குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பதிவிட வேண்டாம்,'என, கூடலுார் ஆர்.டி.ஓ., அறிவுறுத்தினார். கூடலுார், மண்வயல் சமுதாய கூடத்தில் வருவாய் துறை சார்பில், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கூடலுார் ஆர்.டி.ஓ., ராஜ்குமார் தலைமை வகித்து பேசுகையில்,''இப்பகுதிக்கு, வெளியூர்களில் இருந்து,இ--பாஸ் பெறாமல் வருபவர்களை தடுக்க வேண்டும். கொரோனா குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம். வெளி நபர்கள் வருகையை கண்காணித்து தகவல் தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.கூட்டத்தில், தாசில்தார் தினேஷ், டி.எஸ்.பி., ஜெய்சிங் ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கங்காதரன், கூடலுார் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X