கிராம மக்களே சீரமைத்த ஊரணி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2020
03:20

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே தென்மாப்பட்டு அய்யனார் கோயில் அருகே உள்ளது செட்டி ஊரணி.



குடிநீர் ஊரணியாகவும், பின்னர் குளிக்கும் ஊரணியாகவும் இருந்து மீன்கள் வளர்க்கப்பட்டு உள்ளது.கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி ஊரணி கரை கரைந்து நீர்பிடிப்பு பகுதி மேடாகி சிதைந்து குப்பை மேடானது.அக்கம் பக்கத்து குடியிருப்பு வாசிகள், கிராமத்தினர் தாங்களே களத்தில் இறங்கினர்.



தங்கள் பங்களிப்பில் பணம் செலவழித்து மண் அள்ளும் இயந்திரம் மூலம் ஊரணியை துார்வாரி கரையை பலப்படுத்தியுள்ளனர். தற்போது ஊரணி மழைநீரை சேமிக்க தயாராக உள்ளது. இந்த ஊரணிக்கு வரும் வரத்துக்கால்வாய் துார்ந்து உள்ளதால் கண்மாய்க்கு நீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.



ஆர்.நாகராஜன் கூறுகையில்,'தென்மாக்கண்மாயிலிருந்து இந்த ஊரணிக்கு வரத்துக் கால்வாய் உள்ளது. இந்த ஊரணி நிரம்பி, சேங்கை மற்றும் தம்மம் ஊரணிக்கு நீர் செல்லும். தற்போது துார்ந்து போன நாட்டுவாய்க்காலைபேரூராட்சியினர் துார்வாரி ஊரணி நீர்வரத்து ஏற்படுத்த வேண்டும்' என்றார்.



கா.சரவணன் கூறுகையில், 'இந்த ஊரணியை மேலும் விரிவுபடுத்த உள்ளோம். இதற்கு கூடுதல் பரப்பு உள்ளது. சின்ன செட்டியூரணி, பெரிய செட்டியூரணி என்று முன்பு நன்கொடை யாளர்கள் மூலம் இந்த ஊரணி உருவாகியது. அதை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் உள்ளோம். கரைகளில் பசுமை பாரதம் உதவியுடன் மரக்கன்றுகள் நட உள்ளோம்' என்றார்.



கழிவுநீர் குட்டையாக மாறவிருந்ததை தடுத்து ஊரணியை மீட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து ஊரணியை படித்துறைகளுடன் மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X