குஜிலியம்பாறைக்கு கூடுதல் மருத்துவ பணியாளர் அவசியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

15 ஜூலை
2020
04:10
பதிவு செய்த நாள்
ஜூலை 15,2020 03:50

குஜிலியம்பாறை,:குஜிலியம்பாறை ஒன்றியத்தில் கொரோனோ தாக்கம் அதிகரிப்பதால், கூடுதல் மருத்துவ பணியாளரை நியமித்க வேண்டும்.


குஜிலியம்பாறை ஒன்றியத்தில் நேற்று மட்டும், உல்லியக்கோட்டை, வடுகம்பாடி, கூம்பூர், ஆர்.வெள்ளோடு, கருங்கல், கரிக்காலி ஊராட்சிகளில் இருந்து 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை குஜிலியம்பாறை ஒன்றியத்தில் 38 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இந்த ஒன்றியத்தில், போதிய விழிப்புணர்வு இல்லாததால் மக்கள் சமூக இடைவெளியின்றி செயல்படுகின்றனர். இதனால் மருத்துவ பணியாளர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



ஒரு சுகாதார ஆய்வாளர் 3 முதல் 5 ஊராட்சிகளை கவனிக்கும் நிலையில் உள்ளனர். கிராமங்களிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால், பாதிக்கப்பட்டோரின் வீடு, உறவினர்கள் மற்றும் அருகில் உள்ள வீடுகள் என அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதற்கு தற்போதுள்ள டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர் எண்ணிக்கை போதுமானதல்ல. எனவே, கூடுதலாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



தனி வார்டு அவசியம் அரசு அலுவலர்


திண்டுக்கல்:அரசு அலுவலர் ஒன்றிய சங்க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மருத்துவதுறை என அரசு ஊழியர்கள அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அரசு தயவுகூர்ந்து அரசு பணியாளர்களை சுழற்சி முறையில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கென தனி வார்டு அமைத்து கொடுத்து அவர்கள் விரைவில் மீண்டு சேவை புரிய அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X