| கொரோனாவால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்கள் Dinamalar
கொரோனாவால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2020
04:00

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் கொரோனாவால் அரசு மருத்துவர்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



திண்டுக்கல்லில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பரவல் தொடங்கியது முதல் டாக்டர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் இதர அரசு ஊழியர்கள் கொரோனா மீட்பு பணியில் முன்வரிசையில் செயல்படுகின்றனர்.சில வாரங்களாக இவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆதிகம் ஆளாகின்றனர்.



இதுவரை 50 க்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர். 15 துப்புரவு பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், அரசு டாக்டர்கள் 10 பேர், செவிலியர்கள், கம்பவுண்டர்கள் மருத்துவமனையில் பணியாற்றுபவர்கள் என 22 க்கும் மேற்பட்டோர், பயிற்சி டி.எஸ்.பி, எஸ்.ஐ.,க்கள் உட்பட

5 காவலர்கள, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் என தொடர்ந்து அரசு ஊழியர் பாதித்து வருகின்றனர்.அரசு ஊழியர்களை சுழற்சி முறையில் பணியாற்றவும், போதுமான வசதிகள் செய்து கொடுக்கவும் வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X