ஊராட்சி தலைவர் வெட்டிக் கொலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2020
06:07

திருநின்றவூர், சென்னை, திருநின்றவூர் அருகே, பட்டப்பகலில், தி.மு.க.,வை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர், மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆவடி அடுத்த திருநின்றவூர், கொட்டாம்பேடு, லட்சுமிபதி நகரை சேர்ந்தவர் பரமகுரு, 41; வழக்கறிஞர். இவரது மனைவி ஷீபா, 35; இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.தி.மு.க.,வை சேர்ந்த இவர், கொசவன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். திருநின்றவூர், கொட்டாம்பேடு அருகே உள்ள அருந்ததியர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே, கழிவு நீர் கால்வாய் பணி நடந்து வருகிறது.இப்பணியை பார்வையிட, நேற்று மாலை பரமகுரு அங்கு சென்றார். சாலையோரம் நின்று, மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால், பரமகுருவை சரமாரியாக வெட்டினர். இதில், சம்பவ இடத்திலேயே பரமகுரு உயிரிழந்தார்.கொலை கும்பல் தப்பிச் செல்லும் போது, கத்தியை சாலையில் உரசி, தீப்பொறி கிளம்ப பீதியை ஏற்படுத்தினர். இதனால், அங்கு நின்றிருந்த பொதுமக்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட தகவலறிந்ததும், கிராம மக்கள் சாலையில் திரண்டனர். இதனால், பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.திருநின்றவூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, இந்த கொலை நடந்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் இடத்திற்கு அருகே உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, பரமகுரு குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். பட்டப்பகலில் ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், திருநின்றவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X