அடுத்தடுத்த மரணங்கள் சென்னை போலீஸ் அதிர்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2020
06:08

மீனம்பாக்கம், சென்னை, தாம்பரம் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் குருமூர்த்தி, 50; மீனம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர். ஊரடங்கில், ரோந்து வாகனப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, ஜூன், 26ல், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, மூச்சு திணறல் ஏற்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு இறந்தார். அவரது உடல், நேற்று காலை, தாம்பரம், கடப்பேரி சுடுகாட்டில், போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த குருமூர்த்திக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர். நேற்று மாலை, மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், டி.ஜி.பி., திரிபாதி, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்நிகழ்வில் பங்கேற்ற, குருமூர்த்தியின் மகன் தினேஷ்குமார், மகள் அலர்மேல்மங்கை ஆகியோருக்கு, டி.ஜி.பி., திரிபாதி ஆறுதல் கூறினார்.மாம்பலம் இன்ஸ்பெக்டர் பாலமுரளி உட்பட, மூன்று போலீசார் ஏற்கனவே கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், மேலும், ஒரு உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம், சென்னை போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X