மறந்து போன சமூக இடைவெளி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2020
06:09

திருவொற்றியூர் கொரோனா பரவல் காலத்தில், அமைச்சரே, சமூக இடைவெளியின்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கியது, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில், 2,796 பேருக்கு தொற்று உறுதியாகிஉள்ளது. அதில், 2,244 பேர் குணமடைந்து, 683 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு, 69 ஆக உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், இம்மண்டலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவ்வப்போது, மண்டலத்திற்கு வந்து செல்லும் அமைச்சர், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில், சமூக இடைவெளி கடைப்பிடிப்பதில்லை என, குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில், நேற்று, திருவொற்றியூருக்கு வந்த அமைச்சர் உதயகுமார், பல இடங்களில், அ.தி.மு.க.,வினர் ஏற்பாடு செய்த விழாக்களில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.நலத்திட்ட உதவிகள் பெறுவோரை, சமூக இடைவெளியை பின்பற்ற கூறிய அரசியல்வாதிகள், புகைப்படத்திற்கு, 'போஸ்' தரும் ஆர்வத்தில், அமைச்சரை நெருக்கியபடி, சமூக இடைவெளியின்றி நின்றனர்.தேரடியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், சிறிய மேடையில், 20க்கும் மேற்பட்டோர், காற்று கூட புக முடியாத அளவிற்கு நெருங்கி நின்று, நலத்திட்ட உதவிகளை வினியோகித்தது, பலரையும் அதிர்ச்சிக்குஉள்ளாக்கியது.தொற்று பாதிப்பின் வீரியம், மற்ற மண்டலங்களை காட்டிலும் குறைவு என்றாலும், இறப்பு விகிதம் திருவொற்றியூரை கலக்கம் அடைய செய்கிறது. இதுபோன்ற செயல்கள், தவறான முன்னுதாரணமாகி விடும் என, சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X