'தினமலர்' மாணவர் பதிப்பு, 'பட்டம்' இதழ் இன்று முதல் உங்கள் இல்லத்திற்கே வரும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2020
06:10



தமிழக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், அறிவு மேம்பாட்டுக்கும் உதவி செய்யும், நம், 'தினமலர்' மாணவர் பதிப்பு, 'பட்டம்' இதழ், இந்தக் கல்வியாண்டில், இன்று முதல் ஆரம்பமாகி, மாணவர்களின் இல்லங் களுக்கே சென்று சேரத் துவங்கியுள்ளது.இந்தியாவில், வேறு எந்த மாநில மொழியிலும், இது போன்ற முயற்சி நடைபெறவில்லை. தமிழில் தான், முதன்முறையாக, இத்தகைய மாணவர் நாளிதழ், நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று அனைத்துத் தரப்பினரின் பேராதரவோடு, பீடுநடை போடுவது நம், 'பட்டம்' இதழ்.இந்தக் கல்விஆண்டில், பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில், பெற்றோர்களும், ஆசிரியர்களும், பள்ளிகளும், இவ்விதழுக்கு நேரடியாகவே சந்தா செலுத்தி, இதழை வீட்டுக்கே வரவழைக்கலாம் என்று அறிவித்திருந்தோம். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, ஏராளமானோர் சந்தா செலுத்திஉள்ளனர். 12 பக்கங்கள்திங்கள் முதல் வெள்ளி வரை தினமும், 12 பக்கங்கள் கொண்ட இவ்விதழில், இளையோருக்குத் தேவைப்படும் அத்தனை அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. அறிவியல், கணிதம், வரலாறு, சூழலியல், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றோடு, தமிழ் வாசிப்பை மேம்படுத்துவதற்கு என்றே கதைகள், புதிர்கள் ஆகிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன. முதன்முறையாக தமிழில், 'இன்போகிராபிக்ஸ்' என்ற வடிவத்தையும், சிறப்பாகப் பயன்படுத்துவது, 'பட்டம்' இதழ் மட்டுமே.சுவாரசிய செய்திகள், விளையாட்டு, சுய மேம்பாட்டுச் சோதனைகள் என, ஒவ்வொரு பக்கமும் இளையோரின் தேவைகளை ஒட்டி, தேர்ந்த அறிஞர்களாலும், ஆசிரியர்களாலும் எழுதப்பட்டு, அழகாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ரூ.3 மட்டுமேமாணவர்களை, எதிர்கால போட்டித் தேர்வுகளுக்கு, அறிவு வளர்ச்சிக்கு தகுதிப்படுத்தும் விதமாக தயாரிக்கப்படும் இதழ் இது. தனிப்பிரதி விலை, 3 ரூபாய் மட்டுமே.உங்கள் பிரதிக்கு இப்போதே, உங்கள் அருகில் உள்ள, 'தினமலர்' முகவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். இணையம் வழியாக சந்தா செலுத்த, https://www.dinamalar.com/printsubscription/ என்ற லிங்கை, 'கிளிக்' செய்யலாம்.மேலும் விபரங்களுக்கு, ஜெயக்குமார் -- 98843 91342, பிரகாஷ் -- 99443 09681, கோலப்பன் -- 99443 09610 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். - நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X