நடிகை வனிதா குறித்து அவதுாறு பேசியது பெண் கஞ்சா வியாபாரி?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2020
06:11

போரூர், ''நடிகை வனிதா குறித்து அவதுாறாக பேசிய பெண், ஒரு கஞ்சா வியாபாரி,'' என, வனிதாவின் வழக்கறிஞர் ஸ்ரீதர் கூறினார்.நடிகை வனிதா விஜயகுமார், கடந்த மாதம், பீட்டர் பால் என்பவரை, மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.இதுகுறித்து, சூர்யா தேவி என்ற பெண், சமூக வலைத்தளத்தில், வனிதா மற்றும் அவரது திருமணம் குறித்து பேசினார்.தன்னை அவதுாறாக பேசிய சூர்யா தேவி மீது நடவடிக்கை எடுக்க கோரி, கடந்த, 7ல், போரூர் காவல் நிலையத்தில், வனிதா புகார் அளித்தார்.புகார் மீது, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வனிதா தன் வழக்கறிஞருடன், போரூர் காவல் நிலையத்திற்கு நேற்று சென்றார்.அங்கு அவர் அளித்த பேட்டி: சூர்யா தேவி என்ற பெண், என்னை ஆபாசமாக பேசி, தவறான தகவலை சமூகவலைதளத்தில் வெளியிட்டார். என் வழக்கறிஞர் குறித்தும் அவதுாறாக பேசியிருந்தார். இதுகுறித்து, போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தேன்.பட தயாரிப்பாளர் ரவீந்திரன் என்பவரும், என்னை பற்றி அவதுாறாக பேசியுள்ளார். அவர் படத் தயாரிப்பாளராக பிரபலம் ஆனதை விட, பலரை பற்றி சமூக வலைதளங்களில் பேசியே பிரபலமானார்.எனக்கு குடும்ப ஆதரவு இல்லை. சூர்யா தேவிக்கும், ரவீந்திரனுக்கும் தொடர்பு உள்ளது. எனக்கு, 40 வயது ஆகிறது. ஒரு துணை வேண்டும் என்பதற்காக திருமணம் செய்துக் கொண்டேன்.மூன்று குழந்தைகளுக்கு நான் தாய். இப்படி தவறாக பேசினால், என் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வர். இரண்டு நாட்களில் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.இவ்வாறு, வனிதா கண்ணீர் மல்க கூறினார்.வனிதாவின் வழக்கறிஞர் ஸ்ரீதர் கூறியதாவது:வனிதா குறித்து அவதுாறாக பேசிய சூர்யா தேவி, சென்னையில் கஞ்சா விற்பனை செய்யும் ஒரு பெண். அவர், தன் வாடிக்கையாளருடன் பேசிய ஆடியோ என்னிடம் உள்ளது.அந்த பெண்ணை, போலீசார் கைது செய்தால், தப்பிக்கவே, பிரபலங்கள் குறித்து பேசி வருகிறார். இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X