7 மண்டலம் சென்னையில் குணமானோர் எண்ணிக்கை உயர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2020
06:12

திருவொற்றியூர் சென்னையில், தொற்று பாதிக்கப்பட்டவர்களில், ஏழு மண்டலங்களில், 80 சதவீதம் பேரும், எட்டு மண்டலங்களில், 70 சதவீதம் பேரும் குணமடைந்து உள்ளனர். நாளுக்கு நாள் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சுகாதாரத் துறை அதிகாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.சென்னை மாநகராட்சியின், 39 ஆயிரம் தெருக்களில், 85 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஏப்., துவக்கம் முதலே, இங்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்றுடன், 78 ஆயிரத்து, 572 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதில், 60 ஆயிரத்து, 694 பேர் குணமடைந்து உள்ளனர். இது, 77 சதவீதமாகும். தவிர, 16 ஆயிரத்து, 601 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்; உயிரிழப்பு, 1,277 ஆக உள்ளது.முதலிடம்தொற்று பாதிப்பில், சென்னையை விழி பிதுங்க வைத்த மண்டலங்களில், குணமடைந்தோர் எண்ணிக்கை, அசுர வேகத்தில் உயர்ந்து வருவது, பெரும் ஆறுதல் தரும் விஷயமாக உள்ளது.அதன்படி, ராயபுரத்தில், தொற்று பாதிக்கப்பட்ட, 9,716 பேரில், 8,302 பேர் குணமடைந்துஉள்ளனர். இது, 85 சதவீதமாகவும், மாநகராட்சியில் முதலிடமாகவும் உள்ளது. தவிர, 1,243 பேர் சிகிச்சை பெறும் நிலையில், உயிரிழப்பு, 171ஆக உள்ளது.தண்டையார்பேட்டையில், 8,283 பேரில், 6,955 பேர் குணமாகி உள்ளனர். இது, 84 சதவீதமாக உள்ளது. தவிர, 1,148 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்; 180 பேர் உயிரிழந்துள்ளனர்.மகிழ்ச்சிதிரு.வி.க. நகரில், 82; பெருங்குடி, 81; தேனாம்பேட்டை, அண்ணாநகர், மணலியில் தலா, 80 சதவீதம் பேர் குணம்அடைந்து உள்ளனர். இதன் மூலம், 80 சதவீதத்திற்கு மேல் குணம் அடைந்த மண்டலங்களின் எண்ணிக்கை, ஏழாக உள்ளது.மேலும், மாதவரம், 79; அடையாறு, 76; திருவொற்றியூர், வளசரவாக்கம் தலா, 75; அம்பத்துார், 74; சோழிங்கநல்லுார், 72; ஆலந்துார், 71; கோடம்பாக்கம், 70 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர்.அதன்படி, 70 சதவீதத்தை, எட்டு மண்டலங்கள் கடந்துள்ளன. சென்னையை உலுக்கிய கொரோனா பாதிப்பு, தற்போது மெல்ல குறைந்து வருகிறது.புதிய தொற்று குறைவாகவும், குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பதால், மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X