முதியோர், பெண்களுக்கு உதவ புதிய திட்டங்கள் துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2020
10:26

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முதியோர், வயது மூப்பின் காரணமாகவும், தற்போது கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில், அவர்களது பிரச்னைகளை, உரிய அலுவலருக்கோ அல்லது அலுவலகத்துக்கோ சென்று உரிய நிவாரணம் தேட முடியாத நிலையில் உள்ளனர். அவர்களுக்கு உதவும் நோக்கில், மாவட்ட காவல் துறை சார்பில், 'ஹலோ சீனியர்ஸ்' திட்டம் துவங்கப்பட்டு, 99947 17110 என்ற மொபைல் எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, எஸ்.பி., சக்தி கணேசன் வெளியிட்ட அறிக்கை: இத்திட்டத்தின் மூலம், பாதுகாப்பு மற்றும் இதர பிரச்னை உள்ள முதியோர்கள், தங்கள் பிரச்னைகளை, உரிய அலுவலகத்திற்கு சென்று நிவாரணம் தேட முடியாத சூழ்நிலையில், 99947 17110 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால், போலீசார் விரைந்து சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வர். மேலும், பெண்களுக்கு உதவும் வகையில், 'லேடீஸ் பர்ஸ்ட்' என்ற திட்டமும் துவங்கப்பட்டுள்ளது. அதன் மூலம், பெண்கள் தங்களுக்கோ அல்லது தங்களை சார்ந்தவர்களுக்கோ ஏற்படும் பிரச்னைகள் குறித்து, 98945 15110 என்ற எண்ணில் தெரிவித்தால், போலீசார் விரைந்து சென்று, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வர். இரு திட்டங்களிலும் புகார் செய்பவர்களின் விபரங்கள், ரகசியமாக வைக்கப்படும். இந்த எண்கள், 24 மணி நேரமும் பயன்பாட்டில் இருக்கும். புகார் தெரிவித்த, 24 மணி நேரத்திற்குள், புகார்தாரருக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும். இந்த எண்கள் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, எஸ்.பி.,யின் நேரடி மேற்பார்வையில் செயல்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X