குடிநீரில் சாயக்கழிவுநீர் கலப்பு | நாமக்கல் செய்திகள் | Dinamalar
குடிநீரில் சாயக்கழிவுநீர் கலப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2020
10:29

பள்ளிபாளையம்: பெரியகாடு பகுதியில் சாயக்கழிவுநீர், குடிநீர் குழாயில் கலந்து சென்றதால், தண்ணீர் சிவப்பு நிறமாக மாறி வந்தது. பள்ளிபாளையம் அடுத்த பெரியகாடு பகுதியில் நேற்று காலை குழாயில் சிவப்பு நிறத்தில் தண்ணீர் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த தண்ணீரை பயன்படுத்த வில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அலுவலர்கள் நேரில் வந்து பார்வையிட்டனர். மேலும், குடிநீர் குழாயை ஆய்வு செய்யும்போது, ஓரிடத்தில் குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது கண்டறியப்பட்டது. வடிகாலில் சென்ற சாயக்கழிவுநீர், சேதமடைந்த குழாய் வழியாக புகுந்து சென்றதால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டாக தெரிய வந்தது. சேதமடைந்த குடிநீர் குழாய் உடனடியாக சீரமைக்கப்பட்டது. இதன் பின், தண்ணீரை மக்கள் பிடித்துச் சென்றனர்.

 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X