| வடிகால் உடைப்பு: மக்கள் கடும் அவதி Dinamalar
வடிகால் உடைப்பு: மக்கள் கடும் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2020
10:29

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் - வையப்பமலை சாலையில், வடிகால் உடைப்பால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மல்லசமுத்திரத்தில் இருந்து, வையப்பமலை சாலை வழியாக, மாமரப்பட்டி ஏரிக்கு பல ஆண்டுகளாக வடிகால் செல்கிறது. தற்போது, இப்பகுதியில் பெய்த மழையால், அந்த வடிகாலில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் வெளியேறுகிறது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. வாகனஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, உடைப்பை சரிசெய்ய பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X